ஜில்லா முழுக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாபிரியங்கா 

Jilla Mulukka Song Lyrics in Tamil


BGM

பெண் : ஜில்லா முழுக்க நல்லா தெரியும்…
மனச கிள்ளாதே…
எல்லா மனசும் பொல்லா மனசு…
வெளியே சொல்லாதே…

பெண் : நீ விட்டா எகுருவ…
ஒரு பட்டா எழுதுவ…
அத எத்தன கண்ணுங்க பார்க்கும்…
அட என்னமோ ஏதுன்னு கேட்கும்…

பெண் : குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு…
சிலிர்ப்பு வந்திடுச்சு…
அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும்…
நெனைப்பில் வந்திருச்சு…

ஆண் : இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும்…
மனச கிள்ளாதே…
எல்லா மனசும் பொல்லா மனசு…
வெளியே சொல்லாதே…

ஆண் : நீ விட்டா எகுருவ…
ஒரு பட்டா எழுதுவ…
அத எத்தன கண்ணுங்க பார்க்கும்…
அட என்னமோ ஏதுன்னு கேட்கும்…

ஆண் : குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு…
சிலிர்ப்பு வந்திடுச்சு…
அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும்…
நெனைப்பில் வந்திருச்சு…

பெண் : இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும்…
மனச கிள்ளாதே…

ஆண் : எல்லா மனசும் பொல்லா மனசு…
வெளியே சொல்லாதே…

BGM

ஆண் : எனக்கு பரிமாற அத்தை சுட்ட கருவாடே…
பசிக்கு உதவாம பண்ணுறியே பெரும் பாடே…

பெண் : வரட்டும் திரு நாளு…
மாமனுக்கு இலை போட…
பழுத்த பழத்துலதான்…
வண்டு வந்து துளை போட…

ஆண் : நாளும் என்னடி நாளு…
சட்டுன்னு சம்மதம் கூறு…
தோளு ரெண்டையும் சேர்த்து…
சொல்லணும் சங்கதி நூறு…

பெண் : மனசில் உறங்குகிற உணர்ச்சிகள உசுப்புறியே…
ஆண் : விவரம் அறிந்திருந்தும் மறந்தது போல் பசப்புறியே…

பெண் : ஜில்லா முழுக்க நல்லா தெரியும்…
மனச கிள்ளாதே…
எல்லா மனசும் பொல்லா மனசு…
வெளியே சொல்லாதே…

BGM

ஆண் : இடுப்ப ஒடிச்சே நீ…
அன்ன நடை நடக்காதே…
அடுப்பா இருக்கும் என்ன…
குத்தி விட்டு கிளறாதே…

பெண் : கெடச்சா வெளுத்திடுவ…
உன்ன பத்தி தெரியாதா…
வளைச்சி கதை படிக்க…
பாடுறப்பா புரியாதா…

ஆண் : பேச்சி என்னடி பேச்சி…
உச்சியில் நிக்குது சூடு…
மாமன் நெஞ்சுல சாஞ்சி…
மத்தத நீ பாரு…

பெண் : மெதுவா வசியம் பண்ணி…
நெனச்சத நீ முடிச்சு புட்ட…

ஆண் : அதுக்கு தகுந்த படி…
அனுசரிச்சு நடந்து கிட்ட…

பெண் : ஜில்லா முழுக்க நல்லா தெரியும்…
மனச கிள்ளாதே…
எல்லா மனசும் பொல்லா மனசு…
வெளியே சொல்லாதே…

ஆண் : நீ விட்டா எகுருவ…
ஒரு பட்டா எழுதுவ…
அத எத்தன கண்ணுங்க பார்க்கும்…
அட என்னமோ ஏதுன்னு கேட்கும்…

பெண் : குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு…
சிலிர்ப்பு வந்திடுச்சு…
அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும்…
நெனைப்பில் வந்திருச்சு…

ஆண் : இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும்…
மனச கிள்ளாதே…
எல்லா மனசும் பொல்லா மனசு…
வெளியே சொல்லாதே…

பெண் : ஜில்லா முழுக்க நல்லா தெரியும்…
மனச கிள்ளாதே…
எல்லா மனசும் பொல்லா மனசு…
வெளியே சொல்லாதே…


Notes : Jilla Mulukka Song Lyrics in Tamil. This Song from Priyanka (1994). Song Lyrics penned by Vaali. ஜில்லா முழுக்க பாடல் வரிகள்.


Scroll to Top