திகட்ட திகட்ட காதலிப்போம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி.வி. பிரகாஷ் குமார் & யாமினி கண்டசாலாஜி. வி. பிரகாஷ் குமார்அநீதி

Thikatta Thikatta Kadhalippom Song Lyrics in Tamil


குழு : திகட்ட திகட்ட… திகட்ட திகட்ட…
திகட்ட திகட்ட காதலிப்போம்…

குழு : திகட்ட திகட்ட… திகட்ட திகட்ட…
திகட்ட திகட்ட காதலிப்போம்…

—BGM—

ஆண் : இலைகள் தூங்கும் இரவில்…
விழிகள் விண்மீனாக…

—BGM—

ஆண் : அணில்கள் ஆடும் முன்றில்…
விரல்கள் வீணை ஆக…

—BGM—

ஆண் : ஓ… இறகை போலே உன் குரல் பறந்து…
மேகத்தை மெல்ல உரச…
மேகம் கனிந்த மழை நாள் ஒன்றில்…
காதல் கவிதை கிறுக்க…

ஆண் : மழை வெயில் வாசம் கலந்து…
மார்பில் ஊறுகிறாய்…
மாய கதவின் பின்னிருந்து…
காதல் கனவினை பேசுகிறாய்…

ஆண் : தானே தன்னே தானே தன்னே…
தானே தன்னே தானே…
தானே தன்னே தானே தன்னே…
தானேனானே தானே…

ஆண் : தானே தன்னே தானே தன்னே…
தானே தன்னே தானே…
தானே தன்னே தானே தன்னே…
தானேனானே தானே…

குழு : திகட்ட திகட்ட… திகட்ட திகட்ட…
திகட்ட திகட்ட காதலிப்போம்…

குழு : திகட்ட திகட்ட… திகட்ட திகட்ட…
திகட்ட திகட்ட காதலிப்போம்…

—BGM—

பெண் : தீரா பசியுடன் எறும்பென திரிகிறாய்…
எந்தன் உணர்வினிலே…
ஓராயிரம் இரவை உறங்காது…
தின்கிறாய் கனவிலே…

—BGM—

ஆண் & பெண் : இமைகளை மூடுவேன்…
விழிக்குள்ளும் இறங்குவாய்…
கருவிழி தேடுவேன்…
கனவிலும் உறங்குவாய்…

ஆண் : தானேனானே தானேனானே னானானே…
தானேனானே தானேனானே னானானே…

ஆண் & பெண் : தலைக்கோதி கலைப்பதற்கும்…
தலை தோள் மேல் சாய்ப்பதற்கும்…
மடி சேர்ந்து கொள்வதற்கும்…
யாதும் நீ ஆகினாய்…

ஆண் & பெண் : தலைக்கோதி கலைப்பதற்கும்…
தலை தோள் மேல் சாய்ப்பதற்கும்…
மடி சேர்ந்து கொள்வதற்கும்…
திகட்ட திகட்ட காதலிப்போம்…

—BGM—

ஆண் : என்றோ பார்த்த புகைப்பட ஞாபகம்…
நீ என் விழியினிலே…
எங்கோ கேட்ட புது குரல் பாடல்…
எந்தன் மொழியினிலே…

ஆண் : காயங்கள் மறைக்கவும்…
புது காயங்கள் பிறக்கவும்…
பெண் வாசம் தெரியவும்…
நீ மாயங்கள் செய்கிறாய்…

ஆண் & பெண் : மழை பெய்யும் பொழுதெல்லாம்…
உன் ஞாபகம் வருகிறது
உன் ஞாபகம் வருகையிலே…
அடைமழை நெஞ்சில் பொழிகிறதே…

ஆண் & பெண் : மழை பெய்யும் பொழுதெல்லாம்…
உன் ஞாபகம் வருகிறது…
அடைமழை நெஞ்சில் பொழிகிறதே…
திகட்ட திகட்ட காதலிப்போம்…

ஆண் & பெண் : தானே தன்னே தானே தன்னே…
தானே தன்னே தானே…
தானே தன்னே தானே தன்னே…
தானேனானே தானே…

ஆண் & பெண் : தானே தன்னே தானே தன்னே…
தானே தன்னே தானே…
தானே தன்னே தானே தன்னே…
தானேனானே தானே…

குழு : திகட்ட திகட்ட… திகட்ட திகட்ட…
திகட்ட திகட்ட காதலிப்போம்…

குழு : திகட்ட திகட்ட… திகட்ட திகட்ட…
திகட்ட திகட்ட காதலிப்போம்…


Notes : Thikatta Thikatta Kadhalippom Song Lyrics in Tamil. This Song from Aneethi (2023). Song Lyrics penned by Na. Muthukumar. திகட்ட திகட்ட காதலிப்போம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading