ஆடி வந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்பாளையத்து அம்மன்

Aadi Vanthen Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆடி வந்தேன் ஆடி வந்தேன்…
அஞ்சு கொடைக்காரி…
பாடி வந்தேன் பாடி வந்தேன்…
பாண்டியனார் தேவி…

பெண் : தேடி வந்தேன் தேடி வந்தேன்…
தேன் வடிக்கும் பூவ…
நான் இருக்கும் கோவிலுக்கு…
நாளும் அது தேவ…

பெண் : நான் பாம்பு என வேம்பு என…
மாறுகிற சாதி…
மாரி இவ சன்னிதியில்…
மாறாது நீதி…

பெண் : ஊரறியும் உலகறியும்…
கேட்டு பாரு நீயே…
மாய வேலை ஆகாதம்மா…
நானே ஒரு மாயை…

—BGM—

பெண் : தொட்டியத்தில் அழகு தில்லையில்…
திருச்சி நகர் உறையூரில்…
காளி என்று கோவில் கொண்டு…
கொழுவிருக்கும் அம்மனும் நானே…

—BGM—

பெண் : பண்ணாரியில் சமயபுரத்தில்…
புஞ்சை வளர் தஞ்சையினில்…
மாரி என்று பெயர் படைத்து…
மக்களை காக்கும் அன்னையும் நானே…

பெண் : அகிலமும் சுழலாதா…
அடியே என் பிடியினிலே…
அதியசயம் நிகழாதா…
நெனச்சா ஒரு நொடியினிலே…

பெண் : கைகளில் சக்கரம் சங்கை…
கொண்ட கோவிந்தராஜனின் தங்கை…
மார்சடை மீதினில் கங்கை…
கொண்ட வள்ளலும் வள்ளிடும் நங்கை…
ஆடி வந்தேன்…

பெண் : ஆடி வந்தேன் ஆடி வந்தேன்…
அஞ்சு கொடைக்காரி…
தேடி வந்தேன் தேடி வந்தேன்…
தேன் வடிக்கும் பூவ…
நான் இருக்கும் கோவிலுக்கு…
நாளும் அது தேவ…

—BGM—

பெண் : பம்பச்சத்தம் முழங்கும் வேளையில்…
பம்பரமா ஆடிக்கிட்டு…
பாவத்துக்கு நீங்கி வந்த…
பைரவி நான் பாரடியம்மா…

—BGM—

பெண் : வேப்பஞ்சேல இடுப்பில் கட்டுற…
வஞ்சியற்க்கு வாழ்வு தந்து…
வாழ வைக்க என்னைவிட்டா…
வையத்திலே யாரடியம்மா…

பெண் : கருங்கல்லு சிலைதான்னு…
எளிதா நீயும் நினைக்காதே…
கொடுப்பத கொடுக்காம…
மறைச்சா இங்கு நடக்காதே…

பெண் : பூவையே பூவையே கேளு…
நான் சொல்லுறேன் சொல்லுறேன் புத்தி…
பூமியில் ஏதடி கூறு…
இந்த சக்தியை மிஞ்சிற சக்தி…
ஆடி வந்தேன்…

பெண் : ஆடி வந்தேன் ஆடி வந்தேன்…
அஞ்சு கொடைக்காரி…
தேடி வந்தேன் தேடி வந்தேன்…
தேன் வடிக்கும் பூவ…
நான் இருக்கும் கோவிலுக்கு…
நாளும் அது தேவ…

பெண் : நான் பாம்பு என வேம்பு என…
மாறுகிற சாதி…
மாரி இவ சன்னிதியில்…
மாறாது நீதி…

பெண் : ஊரறியும் உலகறியும்…
கேட்டு பாரு நீயே…
மாய வேலை ஆகாதம்மா…
நானே ஒரு மாயை…

—BGM—


Notes : Aadi Vanthen Song Lyrics in Tamil. This Song from Palayathu Amman (2000). Song Lyrics penned by Kalidasan. ஆடி வந்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading