மலர்தான் விழுந்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாஹேஷாம் அப்துல் வஹாப் & ரவி. ஜிஜி. வி. பிரகாஷ் குமார்அநீதி

Malardhan Vizhundhadhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மலர்தான் விழுந்தது…
குளமே அதிர்ந்தது…
பனிமேல் நிலவொளி மலர்ந்தது…

ஆண் : குழந்தை விரல் நுனியிலே…
பறவை வந்து அமர்ந்ததே…
கிணற்றில் இருளில் நிலவின் ஒளி…
வளையல் என மிதந்ததே…

ஆண் : தூரத்தில் வெளிச்சமாய்…
தெரியும் நீ யாரோ…
ஆழத்தில் ஒளிர்கின்றேன்…
அகத்தில் நீதானோ…

—BGM—

ஆண் : பூட்டிக்கொண்ட பனியிலே…
காற்று வந்து நுழைந்ததே…
சூடிக் கொண்ட மலரிலே…
காலம் சென்று அமர்ந்ததே…

ஆண் : போதுமே ஒரு வரம் போதுமே…
பூக்கும் கானம் கடம் யாவுமே…

ஆண் : விண்ணோடும் இல்லை…
மண்ணோடும் இல்லை…
உள்ளோடி மறத்தேன்…

—BGM—

ஆண் : மலர்தான் விழுந்தது…
குளமே அதிர்ந்தது…
பனிமேல் நிலவொளி மலர்ந்தது…

ஆண் : குழந்தை விரல் நுனியிலே…
பறவை வந்து அமர்ந்ததே…
இறைமை இணை கடந்த நிலை…
இதயம் இன்று உணர்ந்ததே…

ஆண் : தூரத்தில் வெளிச்சமாய்…
தெரியும் நீ யாரோ…
ஆழத்தில் ஒளிர்கின்றேன்…
அகத்தில் நீதானோ…

—BGM—


Notes : Malardhan Vizhundhadhu Song Lyrics in Tamil. This Song from Aneethi (2023). Song Lyrics penned by Karthik Netha. மலர்தான் விழுந்தது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading