| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பி.ஆர்.சி. பாலு | எஸ். பி. பாலசுப்ரமணியம் | வித்யாசாகர் | கோயமுத்தூர் மாப்ளே |
Jeevan En Jeevan Song Lyrics in Tamil
ஆண் : ஜீவன் என் ஜீவன்…
எனை நீங்கி போகலாமா…
காதல் என் காதல்…
அது ஏங்கி போகலாமா…
ஆண் : இரவோடு பகல் இன்று…
பிடிவாதம் தனைகொண்டு…
இணை தீயில் வீழலாமா…
ஆண் : ஜீவன் என் ஜீவன்…
எனை நீங்கி போகலாமா…
காதல் என் காதல்…
அது ஏங்கி போகலாமா…
—BGM—
ஆண் : வானம் வேறு மேகம் வேறென்று…
பிரித்து பார்க்க கூடுமா…
நீயும் நானும் வேறு வேறென்று…
பிரிக்க நெஞ்சம் தாங்குமா…
ஆண் : தாமரையை நீர் தொடாததால்…
சொந்தமின்றி போகுமா…
ஆண் : உதடுதானே பொய்கள் பேசுமே…
உயிரும் பொய்கள் பேசுமா…
நிழல் எது நிஜம் எது…
அறியாது இளமாது…
ஆண் : ஜீவன் என் ஜீவன்…
எனை நீங்கி போகலாமா…
காதல் என் காதல்…
அது ஏங்கி போகலாமா…
—BGM—
ஆண் : கரையில் மோதும் அலைகள் ஒயலாம்…
காதல் நெஞ்சம் ஒயுமா…
வானில் தோன்றும் கதிரும் தேயலாம்…
காதல் நினைவு தேயுமா…
ஆண் : நிலவில் கூட களங்கம் காணலாம்…
நெஞ்சில் அது ஏதம்மா…
வானவில் கூட நிறங்கள் மாறலாம்…
நேசம் நிறம் மாறுமா…
ஆண் : தலை சாய்க்க மடி தேடி…
யுகம் தோறும் வருவேனே…
ஆண் : ஜீவன் என் ஜீவன்…
எனை நீங்கி போகலாமா…
காதல் என் காதல்…
அது ஏங்கி போகலாமா…
—BGM—
Notes : Jeevan En Jeevan Song Lyrics in Tamil. This Song from Coimbatore Mappillai (1996). Song Lyrics penned by P. R. C. Balu. ஜீவன் என் ஜீவன் பாடல் வரிகள்.


