ஒரு தேதி பார்த்தால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்வித்யாசாகர்கோயமுத்தூர் மாப்ளே

Oru Thethi Parthal Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…

ஆண் : முதல் முதல் தொடும் போது…
மடல் விடும் உயிர் காதல்…
வா வா எந்தன் வாழ்வே…

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…

—BGM—

பெண் : பார்வை மீது உந்தன் பேரழகே…
மனப்பாடம் செய்யும் இந்த பூங்குருவி…

ஆண் : நேரில் ஆடி வரும் தேன் அருவி…
இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி…

பெண் : கோடையிலும் இதழ் காய்வதில்லை…
ஆசையின் அலைதான் ஓய்வதில்லை…

ஆண் : காதல் கதை என்றும் தோற்றதில்லை…
தேவனின் விதியில் மாற்றம் இல்லை…

பெண் : நாள் முழுக்க உந்தன் ஞாபகம்தான்…
எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம்தான்…

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…

—BGM—

ஆண் : போடவேண்டும் ஒரு பூ விலங்கை…
இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை…

பெண் : ஏற்ற வேண்டும் சின்ன பூ திரியை…
அதில் பார்க்க வேண்டும் முதல் ராத்திரியை…

ஆண் : தாமரையே சிறு வான்பிறையே…
மார்பினில் வழியும் தேன் மழையே…

பெண் : காதலனே இசை பாடகனே…
கீதங்கள் பொழியும் பாவலனே…

ஆண் : நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே…
குளிர் நீர் இல்லையே துள்ளும் மீன் இல்லையே…

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…

ஆண் : முதல் முதல் தொடும் போது…
மடல் விடும் உயிர் காதல்…

ஆண் & பெண் : வா வா எந்தன் வாழ்வே…

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்…
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்…

பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்…
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்…

Notes : Oru Thethi Parthal Song Lyrics in Tamil. This Song from Coimbatore Mappillai (1996). Song Lyrics penned by Vaali. ஒரு தேதி பார்த்தால் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading