பூ நாழி பொன் நாழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிசித் ஸ்ரீராம்ஜி. வி. பிரகாஷ் குமார்அநீதி

Poo Naazhi Pon Naazhi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்…
தோளேத்தி ஊர காட்ட போறேன்…

ஆண் : நீ விழுதென தாங்கி நிக்கும் போது…
உனக்கொரு மரமாவேன்…
நான் இலையாய் மண்ணில் விழுந்து…
நான் வேருக்கு உரமாவேன்…

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…

—BGM—

ஆண் : மஞ்ச பாப்பாத்தி…
கண்ணே நீதான்டா…
நெஞ்ச மல்லாத்தி போகும் பூதான்டா…

ஆண் : நாக்கு ஊத்தெடுக்கும்…
வெல்லம் நீதான்டா…
தீபம் ஏத்தி வைக்கும்…
செல்ல தீதான்டா…

ஆண் : உன் பாசம் மூட்ட கட்ட…
சாக்கொன்னு வேணும்…
என் ஆச உச்சத்துக்கு…
ஏன் ராசா போனும்…

ஆண் : தேய்பிறையே இல்லையப்பா…
பிள்ளை வானத்தில்…
சேர்ந்திடும் சிந்தும் சோறும்…
அன்னதானத்தில்…

ஆண் : உன் பேச்சில் கொஞ்சக்காடு…
நனைகிறதே…
உன் வாசம் தேடி காத்தும்…
அலைகிறதே…

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்…
தோளேத்தி ஊர் காட்ட போறேன்…

ஆண் : நீ விழுதென தாங்கி நிக்கும் போது…
உனக்கொரு மரமாவேன்…
நான் இலையாய் மண்ணில் விழுந்து…
நான் வேருக்கு உரமாவேன்…

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…

—BGM—


Notes : Poo Naazhi Pon Naazhi Song Lyrics in Tamil. This Song from Aneethi (2023). Song Lyrics penned by Ekadasi. பூ நாழி பொன் நாழி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading