சொரக்கா பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. ஏகாதேசிஆதித்யா ஆர்.கே & பத்ரா ரஜின்ஜி. வி. பிரகாஷ் குமார்சர்தார்

Soraka Poove Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சொரக்கா பூவே என்ன…
சொக்க வச்சி கவுத்துபுட்ட…
காணாம போனேன் இப்போ…
உன்னால உன்னால…

பெண் : மரக்கா சந்தனமா…
மணக்குற ஆம்பளதான்…
கிறுக்கா சுத்துறேனே…
தன்னால தன்னால…

ஆண் : வழியில வாசத்த நீ தந்த தானே…
விழியில நான் வாங்கி போனேன் புள்ள…

பெண் : உசுருல நீ நட்ட அன்பாலதானே…
பூ பூத்தே நின்னேன்…
உன் முன்னால நான்…

பெண் : நல்லக்கால் முனிவநாரதா…
முனிவநாரதா… ஹா ஹா…
நல்லக்கால் முனிவநாரதா…
முனிவநாரதா… ஹே ஹே…

பெண் : தானானோ ஓஹோ ஹோ கண்ணே…
ஆரோரோ ஓஹோ ஹோ கண்ணே…
தானானோ ஓஹோ ஹோ கண்ணே…
ஆரோரோ ஓஹோ ஹோ கண்ணே…

—BGM—

ஆண் : நெஞ்ச வகுந்துதான்…
நீ உள்ள புகுந்திட்ட…
என்ன அழிச்சிதான்…
அடி உன்ன எழுதிட்ட…

பெண் : மீச முடியில…
தூண்டில் போடுறேன்…
கொழா கட்டிக்கிட்டு…
உன் பேர கூவுறேன்…

ஆண் : எனக்கான ஆகாசம்…
நீதான் பொண்டாட்டி…
இருட்டாகி போவேன்டி…
நீயும் இல்லாட்டி…

பெண் : மரமா மொளச்சி…
நெஞ்சுக்குள்ள நிக்குறியே…
நிழலாட வக்கிறியே…
என்ன சொல்ல…

பெண் : நல்லக்கால் முனிவநாரதா…
முனிவநாரதா… ஹா ஹா…
நல்லக்கால் முனிவநாரதா…
முனிவநாரதா… ஹே ஹே…

பெண் : தானானோ ஓஹோ ஹோ கண்ணே…
ஆரோரோ ஓஹோ ஹோ கண்ணே…
தானானோ ஓஹோ ஹோ கண்ணே…
ஆரோரோ ஓஹோ ஹோ கண்ணே…

—BGM—

பெண் : உங்க நினப்புல…
உசுரு வாழுறேன்…
வந்து போன அலையினுனால…
தாகம் தீர்க்குறேன்…

ஆண் : தூர வெலகுறேன்…
வேல போகுறேன்…
ஒண்ணா சேந்து வாழத்தானே…
நானும் துடிக்கிறேன்…

பெண் : நீ மொறப்பாக வெறப்பாக…
நிப்பாயே நிப்பாயே…
அட என்னால அடி சாஞ்ச…
சிப்பாயே சிப்பாயே…

பெண் : கொஞ்சம் பொறு…
நல்லதொரு காலம் பொறக்கும்…

பெண் : நல்லக்கால் முனிவநாரதா…
முனிவநாரதா… ஹா ஹா…
நல்லக்கால் முனிவநாரதா…
முனிவநாரதா… ஹே ஹே…

பெண் : தானானோ ஓஹோ ஹோ கண்ணே…
ஆரோரோ ஓஹோ ஹோ கண்ணே…
தானானோ ஓஹோ ஹோ கண்ணே…
ஆரோரோ ஓஹோ ஹோ கண்ணே…


Notes : Soraka Poove Song Lyrics in Tamil. This Song from Sardar (2022). Song Lyrics penned by K. Ekadesi. சொரக்கா பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading