யாரும் இல்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அந்தோனி தாசன்யுவன் ஷங்கர் ராஜாநானே வருவேன்

Yaarum Illa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாரும் இல்லா பொன் நேரமே…
உன் மாயங்கள்தானே கண்ணோரமே…
காடும் காற்றும் கை வீசுமே…
உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே…

ஆண் : நீயும் நானும் வாழும் வரை…
காட்டில் எங்கும் காதல் மழை…
நம்மை போலே இரண்டு சிலை…
இது போதும் என் காலம் வரை…

ஆண் : ஆடும் தோணி நீரில் சிறை…
பாடும் வண்டு தேனில் சிறை…
காணும் யாவும் கண்ணில் சிறை…
இது போல் நானும் இன்பத்தில் ஆயுள் சிறை…

—BGM—

ஆண் : துருவென இருந்தேன்…
துணியென மடித்தாய்…
துடுப்பின்றி அலைந்தேன்…
துணையாய் கிடைத்தாய்…

ஆண் : மணல் என இருந்தேன்…
மலர்வனம் கொடுத்தாய்…
மரங்களின் நிழலில்…
நீயே சிரித்தாய்…

ஆண் : நான் அம்போடு வாழ்ந்த காலம் எல்லாம்…
உன் அன்போடு மாறிப் போகுதடி…
நான் சொல்லாமல் போன சோகம் எல்லாம்…
ஏன் இல்லாமல் இன்று ஆகுதடி…

ஆண் : அழகு பிள்ளைகள் பாதைக்குள் காயமில்லை…
உன் பக்கத்தில் என் நெஞ்சில் பாரமில்லை…
நதியின் ஓசை நகரும் போது…
நமையும் தாலாட்டுதே…

ஆண் : யாரும் இல்லா பொன் நேரமே…
உன் மாயங்கள்தானே கண்ணோரமே…
காடும் காற்றும் கைவீசுமே…
உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே…

ஆண் : நீயும் நானும் வாழும் வரை…
காட்டில் எங்கும் காதல் மழை…
நம்மை போலே இரண்டு சிலை…
இதுதான் என் உயிர் தேவை…

—BGM—


Notes : Yaarum Illa Song Lyrics in Tamil. This Song from Naane Varuvean (2022). Song Lyrics penned by Vivek. யாரும் இல்லா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading