தேனூறும் ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிலக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Thenuram Ragam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆரீராரோ ஆரிராரிரோ…
ஆரீராரோ ஆரிராரிரோ…

பெண் : தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…

பெண் : உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஆடாத தீபந்தான் என் இல்லம்…
பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம்…

பெண் : உன் அன்பாலே பொங்காதோ…
ஆனந்த வெள்ளம்…
கனவுகளே கனவுகளே இரவென்னும் தீபம்…
எரிகின்ற நேரம்…

பெண் : உறவைத் தேடி வாருங்கள்…
கண்களில் தென்றல் வீசும்…
கண்ணுறங்கு உன்னை நீயே மறந்துறங்கு…

பெண் : தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…

பெண் : உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
ஆரீராரோ ஆரிராரிரோ…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…

BGM

பெண் : ஆகாயம் மண் மீது வீழாது…
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது…

பெண் : இனி என் போன்ற அன்னைக்கு…
ஏகாந்தம் ஏது…
உறவுகளால் ஒரு உலகம்…
இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம்…

பெண் : ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம்…
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்…
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்…

பெண் : தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…

பெண் : உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…

பெண் : ஆரீராரோ… ம்ம்ம் ம்ம்ம் லால லலலா…


Notes : Thenuram Ragam Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by Vairamuthu. தேனூறும் ராகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading