தங்க மயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
உளுந்தூர்பேட்டை சண்முகம்சீர்காழி கோவிந்தராஜன்டி.பி.ராமச்சந்திரன்முருகன் பாடல்கள்

Thanga Mayam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தங்க மயம் முருகன் சந்நிதானம்…
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்…
தங்க மயம் முருகன் சந்நிதானம்…
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்…

ஆண் : அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்…
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்…
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்…
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்…

ஆண் : தங்க மயம் முருகன் சந்நிதானம்…
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்…

—BGM—

ஆண் : எங்கும் மனம் பரப்பும் மாலைகளே…
அவன் ஈராறு கைகளாம் தாமரையே…
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே…
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே…
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே…
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே…

ஆண் : தங்க மயம் முருகன் சந்நிதானம்…
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்…

—BGM—

ஆண் : கருணை மழை பொழியும் கருவிழிகள்…
அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்…
கருணை மழை பொழியும் கருவிழிகள்…
அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்…

ஆண் : அமுதம் ஊறி வரும் திருவடிகள்…
அமுதம் ஊறி வரும் திருவடிகள்…
அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்…
அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்…

ஆண் : தங்க மயம் முருகன் சந்நிதானம்…
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்…
ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்…
ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்…


Notes : Thanga Mayam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Ulundurpettai Shanmugam. தங்க மயம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading