தல கோதும் இளங்காத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜுமுருகன்பிரதீப் குமார்சீன் ரோல்டன்ஜெய் பீம்

Thala Kodhum Song Lyrics in Tamil


ஆண் : தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்…
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்…

BGM

ஆண் : கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள…
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல…

BGM

ஆண் : தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்…
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்…
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள…
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல…

ஆண் : ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்…

BGM

ஆண் : நிழல் நிக்குதே நிக்குதே…

ஆண் : ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்…
நிழல் நிக்குதே நிக்குதே…
உன்ன நம்பி நீ முன்ன போகையில…
பாத உண்டாகும்…

ஆண் : நிக்காம முன்னேறு…
கண்ணோரம் ஏன் கண்ணீரு…
நிக்காம முன்னேறு…
அன்பால நீ கைசேரு… கைசேரு…

BGM

ஆண் : நீல வண்ண கூரை இல்லாத…
நிலம் இங்கு ஏது…
காலம் என்னும் தோழன் உன்னோடு…
தடைகளை மீறு…

ஆண் : மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே…
போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே…

ஆண் : மீதி இருள் நீ கடந்தால்…
காலை ஒளி வாசல் வரும்…
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்…
நமக்கான நாள் வரும்…

ஆண் : தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்…
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்…
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள…
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல…

ஆண் : ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்…
நிழல் நிக்குதே நிக்குதே…
உன்ன நம்பி நீ முன்ன போகையில…
பாத உண்டாகும்…

ஆண் : நிக்காம முன்னேறு…
கண்ணோரம் ஏன் கண்ணீரு…
நிக்காம முன்னேறு…
அன்பால நீ கைசேரு…

ஆண் : நிக்காம முன்னேறு…
கண்ணோரம் ஏன் கண்ணீரு…
நிக்காம முன்னேறு…
அன்பால நீ கைசேரு…


Notes : Thala Kodhum Song Lyrics in Tamil. This Song from Jai Bhim (2021). Song Lyrics penned by Rajumurugan. தல கோதும் இளங்காத்து பாடல் வரிகள்.


Scroll to Top