polladha-ulagathiley-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசீன் ரோல்டன்சீன் ரோல்டன்ஜெய் பீம்

Polladha Ulagathiley Song Lyrics in Tamil


BGM

இந்த பொல்லாத உலகத்திலே…
ஏன் என்னை படைத்தாய் இறைவா…
வலி தாங்காமல் கதறும் கதறல்…
உனக்கே கேட்கவில்லையா…

எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ…
எங்கு போய் தொலைந்தாய் இறைவா…
கரும் கல்லான உன்னை நான்…
பொழுதும் தொழுதேன் போதவில்லையா…

வாடி வதங்கும் ஏழையை…
நீயும் வதைத்தால் ஆகுமா…
கோடி விளக்கை ஏற்றி நீ…
ஊதியணைத்தால் நியாயமா…

கண்ணீரே வழித்துணையா…
நின்றேனே இது விதியா…
எல்லாமே தெரிந்தவன் நீ…
காப்பாற்ற மனம் இல்லையா…

BGM

வேதனை மேலும் வேதனை…
தருவதும் உன் வேலை ஆனதோ…
உறவின்றி என் உயிர் நோவதோ…

கேட்டு நான் வாங்கவில்லையே…
கொடுத்த நீ வாங்கி போவதோ…
துணை இன்றி நான் தனியாவதோ…

காணாத கனவை நீ காட்ட…
வாழ்வு வந்ததே…
கை சேர்ந்த நிலாவை பாராமல்…
வானம் சோர்ந்ததே…

வரம் தராமல் நீ போனால் என்ன…
சோராமல் போர் இடுவேன்…
என்ன ஆனாலுமே ஓயாமலே…
என் பாதை நான் தொடர்வேனே…

கண்ணீரே வழித்துணையா…
நின்றேனே இது விதியா…
எல்லாமே தெரிந்தவன் நீ…
காப்பாற்ற மனம் இல்லையா…

BGM

தேடியே கால்கள் ஓய்ந்ததே…
திசைகளும் வீழ்ந்து போனதே…
இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே…

வேர்வரை தீயும் பாய்ந்ததே…
வெறுமையில் நாட்கள் நீளுதே…
அதிகாரமோ விளையாடுதே…

ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற…
ஏணி இல்லையே…
வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க…
நாதி இல்லையே…

ஒரு நூலே இல்லா காத்தாடி போல்…
தள்ளாடுதே இதயம்…
இனி என்னாகுமோ ஏதாகுமோ…
பதில் சொல்லாமல் போகாது காதல்…

இந்த பொல்லாத உலகத்திலே…
ஏன் என்னை படைத்தாய் இறைவா…
வலி தாங்காமல் கதறும் கதறல்…
உனக்கே கேட்கவில்லையா…

எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ…
எங்கு போய் தொலைந்தாய் இறைவா…
கரும் கல்லான உன்னை நான்…
பொழுதும் தொழுதேன் போதவில்லையா…

வாடி வதங்கும் ஏழையை…
நீயும் வதைத்தால் ஆகுமா…
கோடி விளக்கை ஏற்றி நீ…
ஊதியணைத்தால் நியாயமா…

BGM


Notes : Polladha Ulagathiley Song Lyrics in Tamil. This Song from Jai Bhim (2021). Song Lyrics penned by Yugabharathi. பொல்லாத உலகத்திலே பாடல் வரிகள்.