நான் பார்த்த முதல் முகம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்சித் ஶ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாவலிமை

Naan Paartha Mudhal Mugam Lyrics in Tamil

—BGM—

ஆண் : நான் பார்த்த முதல் முகம் நீ…
நான் கேட்ட முதல் குரல் நீ…
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே…

ஆண் : நான் வாழ்ந்த முதல் அறை நீ…
நான் வரைந்த முதல் படம் நீ…
நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே…

ஆண் : சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்…
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்…
சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்…
ஆவலோடுதான்…

ஆண் : வளர்ந்தவன் போல தெரிந்தாலும்…
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை…
இமைகளுக்குளே அடைகாத்தாய்…
ஆசையோடுதான்…

ஆண் : அம்மா என் முகவரி நீ அம்மா…
என் முதல் வரி நீ அம்மா…
என் உயிர் என்றும் நீ அம்மா…

ஆண் : நீயே எனக்கென பிறந்தாயே…
அனைத்தையும் தந்தாயே…
என் உலகம் நீ என் தாயே…

—BGM—

ஆண் : உன் வாசம் எனக்கு வலிமை தரும்…
உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்…
உன் வாழ்க்கையின் மேல் என் வாழ்க்கையினை வரைந்து வைத்தாயே…

ஆண் : ஒரு தோல்வி என்னை தொடும்போது…
என் தோளை வந்து தொடுவாயே…
நீ தொட்டதுமே துலங்கிடுமே எல்லாம் மாறுமே…

ஆண் : விடுமுறையை இல்லாமல் தாய் வேலை செய்கிறாள்…
இதற்கான காணிக்கையை நான் என்ன தான் தருவதோ… ஓ… ஓ…

ஆண் : அம்மா… ஓ… அம்மா… அம்மா… ஆஅஅஅ…
அம்மா என் முகவரி நீ அம்மா…
என் முதல் வரி நீ அம்மா…
என் உயிர் என்றும் நீ அம்மா…

ஆண் : நீயே எனக்கென பிறந்தாயே…
அனைத்தையும் தந்தாயே…

குழு (ஆண்கள்) : தந்தாயே…

ஆண் : என் உலகம் நீ என் தாயே… ஓஓ…


Notes : Naan Paartha Mudhal Mugam Song Lyrics in Tamil. This Song from Valimai (2022). Song Lyrics penned by Vignesh Shivan. நான் பார்த்த முதல் முகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading