பொங்கலோ பொங்கல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராஇளையராஜாமகாநதி

Pongalo Pongal Song Lyrics in Tamil


—BGM—

குழு : பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…

—BGM—

பெண் : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு…
அன்பின் அன்னையடி…
இவள் தண்ணீர் என்றொரு ஆடைக் கட்டிடும்…
தெய்வ மங்கையடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…

குழு : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…

—BGM—

பெண் : முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால…
கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால…
சேத்தோட சேர்ந்த விதை நாத்து விடாதா…
நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா…

பெண் : செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம்தான்…
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம்தான்…

குழு : நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது…
வானில் இல்லையடி…
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது…
கனவில் இல்லையடி…

பெண் : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு…
அன்பின் அன்னையடி…
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்…
தெய்வ மங்கையடி…


Notes : Pongalo Pongal Song Lyrics in Tamil. This Song from Mahanadhi (1994). Song Lyrics penned by Vaali. பொங்கலோ பொங்கல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading