தையல்நாயகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
நேமத்தான்பட்டி ஏ.ஆர். சுப்ரமணியன் செட்டியார்அகிலா நடேசன்Unknownஅம்மன் பாடல்கள்

Thaiyalnayagi Song Lyrics in Tamil


பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…
தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : ஊர் உலகம் காப்பவளே தையல்நாயகி…
உன் பாதம் சரணடைந்தேன் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : குங்குமத்தில் ஒளி வீசும் தையல்நாயகி…
முத்துக் குமரனுக்கே தாயுமானாய் தையல்நாயகி…
வைத்தியத்தின் சிகரமாம் தையல்நாயகி…
வைத்தியநாதனுக்கே துணையுமானாய் தையல்நாயகி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : தங்கமுத்து மண்டபத்தில் தையல்நாயகி…
என்றும் சிங்காரக் கொலுவில் இருக்கும் தையல்நாயகி…
பொங்கி வரும் காவிரி போல் தையல்நாயகி…
தங்குதடை நீக்கிடுவாள் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : காட்டுவழி ஆனாலும் தையல்நாயகி…
கனிவுடனே துணைவருவாள் தையல்நாயகி…
கள்ளர்பயம் ஆனாலும் தையல்நாயகி…
கலங்கவே விடமாட்டாள் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : மணமுடிக்கக் கேட்டுக்கொண்டால் தையல்நாயகி…
மங்கலமாய் முடித்து வைப்பாள் தையல்நாயகி…
மழலைச்செல்வம் வேண்டுமென்றால் தையல்நாயகி…
மகிழ்ச்சியுடன் தந்திடுவாள் தையல்நாயகி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : மாடு மனை வீடு சுற்றம் தையல்நாயகி…
நீ மனது வைத்தால் வளரும் அம்மா தையல்நாயகி…
காடுகரை தோப்பு வயல் தையல்நாயகி…
உன் கண்பட்டால் பொன் விளையும் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : அம்மா என்றே உனை அழைத்தால் தையல்நாயகி…
ஆறுதலே பிறக்குதம்மா தையல்நாயகி…
தாயே என்று உனை அழைத்தால் தையல்நாயகி…
நோய்நொடிகள் நீங்குதம்மா தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : பேறுபெறச் செய்பவளே தையல்நாயகி…
எங்கள் பிள்ளைகளைக் காக்க வேண்டும் தையல்நாயகி…
தொல்லை எல்லாம் நீக்க வேண்டும் தையல்நாயகி…
வாழ நல்ல வழி காட்ட வேண்டும் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : கம்பூன்றி நடை நடந்து தையல்நாயகி…
உனைக் காணவே வருகின்றோம் தையல்நாயகி…
தெம்புண்டு மனதினிலே தையல்நாயகி…
திவ்ய தரிசனமே தர வேண்டும் தையல்நாயகி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : செய்யும் தொழில் சிறக்க வேண்டும் தையல்நாயகி…
அதில் செல்வ வளம் பெருக வேண்டும் தையல்நாயகி…
ஆறுநூறு ஆகவேண்டும் தையல்நாயகி…
ஆனந்தமே பொங்க வேண்டும் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : சங்கொலி முழங்க வேண்டும் தையல்நாயகி…
என் சந்ததியும் சிறக்க வேண்டும் தையல்நாயகி…
மங்கலமே பொங்க வேண்டும் தையல்நாயகி…
என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…

பெண் : அம்மா என்றே உனை அழைத்துத் தையல்நாயகி…
அடிபணிந்தேன் உந்தன் பிள்ளை தையல்நாயகி…
என்ன குறை எனக்கினிமேல் தையல்நாயகி…
எனக்குத் துணை நீ இருக்க தையல்நாயகி…

பெண் : தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…
தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…


Notes : Thaiyalnayagi Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Nemathanpatti AR. Subramanian Chettiar. தையல்நாயகி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading