தாமரைப் பூவில் அமர்ந்தவளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. சோமுபி. சுசீலாசோமு & கஜாஅம்மன் பாடல்கள்

Thaamaraipoovil Song Lyrics in Tamil


BGM

பெண் : தாமரைப் பூவில் அமர்ந்தவளே…
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே…
செந்தூரத் திலகம் அணிந்தவளே…
தாமரைப் பூவில் அமர்ந்தவளே…
செந்தூரத் திலகம் அணிந்தவளே…
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே…

BGM

பெண் : சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சினில்…
சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சினில்…
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே…
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே…
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே…

BGM

பெண் : சுந்தரி பார்வதி பாமகளும்…
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே…
உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே…
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே…
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே…

BGM

பெண் : அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே…
அமரர்கள் துதி பாடும் அமுதமும் நீயே…
அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே…
அமரர்கள் துதி பாடும் அமுதமும் நீயே…

பெண் : செல்வங்கள் பெருகும் உந்தன்…
திருவருள் துணையாலே…
செல்வங்கள் பெருகும் உந்தன்…
திருவருள் துணையாலே…
உலகமேல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே…

பெண் : தாமரைப் பூவில் அமர்ந்தவளே…
செந்தூரத் திலகம் அணிந்தவளே…
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே…


Notes : Thaamaraipoovil Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by K. Somu. தாமரைப் பூவில் அமர்ந்தவளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading