Tag Archives: எஸ். ஞானகரவேல்

நாணல் பூவாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஞானகரவேல்ஜனனி எஸ்.வி & கிருஷ்ண குமார்கிருஷ்ண குமார்கிருமி

Naanal Poovaai Song Lyrics in Tamil


பெண் : நாணல் பூவாய் நானும் வளைந்தடா…
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா…
மூன்றாம் பாலில் மூழ்கி விளையாட…
யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற…

ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…

BGM

ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…

BGM

ஆண் : முத்தம் கேட்டு இதழ்கள் படியேற…
சத்தம் போட்டு இதயம் தடுமாற…

பெண் : வாடை காற்றில் தேகம் குளிராக…
வா வா என்னை போர்த்து அனலாக…

ஆண் : தேனும் நீயும் ஒன்றுதான்…
தேனில் மூழ்கும் வண்டு நான்…

பெண் : தீயும் நீயும் ஒன்றுதான்…
தீயில் ஒளிரும் தீபம் நான்…

ஆண் : தேவை தீருமா… தேடல் தொடருமா…

ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…

BGM

ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…


Notes : Naanal Poovaai Song Lyrics in Tamil. This Song from Kirumi (2015). Song Lyrics penned by S.Gnanakaravel. நாணல் பூவாய் பாடல் வரிகள்.


Sivakasi Rathiyae Song Lyrics in Tamil

சிவகாசி ரதியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஞானகரவேல்பெரிய கருப்பு தேவர்எஸ்.எஸ்.குமரன்பூ

Sivakasi Rathiyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே…
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே…
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி…

BGM

ஆண் : முகத்திலே தெரியுற சுருக்கத்தை போலே…
அறுபது வயசில படுத்துறாளே…
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே…
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி…

BGM

ஆண் : ஒத்தையடி பாதையிலே சுள்ளி பொறுக்க…
மத்தியானம் வருவானு பூத்து கிடந்தேன்…
ஒத்த பானை மேலே வந்த பேய பார்த்துதான்…
தலை தெறிக்க ஓட்டம் புடிச்சேன்…

ஆண் : ஏய்… அய்யனாரு சாமிய காவலுக்கு வேண்டித்தான்…
காதல நான் சொல்ல நினைச்சேன்…
அவ பாம்பாட்டி ஒருத்தனை பார்த்து பார்த்து சிரிச்சத…
எங்க போய் சொல்லி தொலைப்பேன்…

ஆண் : அந்த பந்தக்காலு பக்கத்துல பாரு…
இவ அந்தக்கால சொக்கத்தங்க தேரு…

BGM

ஆண் : சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே…
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே…
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி…

BGM

ஆண் : பம்புசெட்டு தண்ணியிலே அவ குளிக்க…
தென்னை மாற உச்சியில நானும் இருப்பேன்…
தென்னை மட்டை தேளு ஒன்னு என்னை கடிக்க…
கத்திக்கிட்டு பல்ல இளிப்பேன்…

ஆண் : ஏ கெண்ட மீனைப்போலத்தான்…
துள்ளிக்கிட்டு திரிஞ்சவ…
கருவாடா வந்து நிக்கிறா…

ஆண் : இப்ப நல்ல நேரம் பார்க்கல…
தாம்பூலமும் மாத்தள…
தாலியத்தான் கட்டப்போறேன்…

ஆண் : உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயே
இவ இத்துப்போன ஐஸ்வர்யாராயி…

BGM

ஆண் : சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே…
உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே…
இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி…

BGM


Notes : Sivakasi Rathiyae Song Lyrics in Tamil. This Song from Poo (2008). Song Lyrics penned by S. Gnanagaravel. சிவகாசி ரதியே பாடல் வரிகள்.


ஐஸ் கட்டி குருவி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஞானகரவேல்பிரதீப் குமார் & ரான் ஈதன் யோஹான்ரான் ஈதன் யோஹான்டி பிளாக்

Ice Katti Kuruvi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐஸ் கட்டி குருவி…
உருகி உருகி பார்த்துட்டு போகயில…
காலில்ல தரயில…

ஆண் : மின்மினி கண்ணழகி…
சிமிட்டி சிமிட்டி கண்ணால பேசயில…
என்னால முடியல…

ஆண் : உன பார்க்கும் முன்ன…
சொதப்பலா திருஞ்சேன்…
உன பார்த்த பின்ன…
கலக்கலா மாறிட்டேன்…

ஆண் : மயிலே உன் ஸ்மைலு…
விட்டமின்னு தரும் வெயிலு…
அடடா உன் எழிலு ஆலமர நிழலு…

ஆண் : அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு…
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு…
ரசகுல்லா பார்வை தருதே போதை…

BGM

ஆண் : தேவதை சாப்பிடும் போது…
சிந்துற பருக்க மீது…
எறும்பாக ஆசை…
வானவிலகுது மீசை…

ஆண் : லேசா நீ பார்க்க…
அத நானும் ரசிக்க…
டே ஆச்சு நைட்டு…
தூக்கம் கிலோ என்ன றேட்டு…

ஆண் : நீயும் நானும் கை கோர்த்து போனா…
பாக்கும் சுவரெல்லாம் பூக்கும்…
நீயும் நானும் தோள் சாய்ந்து பேச…
வானம் ஒட்டு கேட்க வரம் கேட்கும்…

ஆண் : ஹாய் சொல்லயில இதயம் குதிக்குதே…
பாய் சொல்லயில சிலையா நிக்குமே…
என் பைக் இல் நீ ஏற ஃப்லைட் ஆகுமே…

BGM

ஆண் : ஐஸ் கட்டி குருவி…
உருகி உருகி பார்த்துட்டு போகயில…
பார்த்துட்டு போகயில
காலில்ல தரயில…

ஆண் : மின்மினி கண்ணழகி…
சிமிட்டி சிமிட்டி கண்ணால பேசயில…
கண்ணால பேசயில…
என்னால முடியல…

ஆண் : உன பார்க்கும் முன்ன…
சொதப்பலா திருஞ்சேன்…
உன பார்த்த பின்ன…
கலக்கலா மாறிட்டேன்…

ஆண் : மயிலே உன் ஸ்மைலு…
விட்டமின்னு தரும் வெயிலு…
அடடா உன் எழிலு ஆலமர நிழலு…

ஆண் : அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு…
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு…
ரசகுல்லா பார்வை தருதே போதை…

BGM

ஆண் : ஐஸ் கட்டி குருவி…


Notes : Ice Katti Kuruvi Song Lyrics in Tamil. This Song from D Block (2022). Song Lyrics penned by Gnanakaravel. ஐஸ் கட்டி குருவி பாடல் வரிகள்.


உசுரையே உலுக்குதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஞானகரவேல்சைந்தவிசனத் பரத்வாஜ்தேன்

Usuraiye Ulukkuthey Song Lyrics in Tamil


பெண் : நநநந நா…
நநநந நா… ஆஆ…

—BGM—

பெண் : உசுரையே உலுக்குதே நீ எந்தன் சாமியோ…
நெனச்சதே நடுக்குதே இது நல்ல நேரமோ…

பெண் : கைய புடிச்சி நடுக்குற திசை எங்கோ…
கம கமன்னு மணக்குது மண் வாசம்…
உனக்கென வாழும்போது இருஉடல் இணைஞ்சது ஒரு உசுரா…

பெண் : உசுரையே உலுக்குதே நீ எந்தன் சாமியோ…
நெனச்சதே நடுக்குதே இது நல்ல நேரமோ…

பெண் : நநநந நா…
நநநந நா… நநநந நா…

—BGM—

பெண் : உறவாக வாழவே வரம் கேட்டோம் சாமிய…
குடுக்காத சாமிய குறை சொல்ல தோணல…
வாழமட்ட சடங்குமே வாழ வச்சு பார்கல…

பெண் : மனசோட அள்ளி வந்தேன்…
மலைதேன உன்ன கண்டேன்…
காலம் தோறும் நீயும் நானும்…
காட்டுக்குள்ள மலை போல நெலச்சிருப்போம்…

பெண் : உசுரையே உலுக்குதே நீ எந்தன் சாமியோ…
நெனச்சதே நடுக்குதே இது நல்ல நேரமோ…

—BGM—

பெண் : என் தாயி தந்தைய உனக்குள்ள பாக்குறேன்…
உன் கூட வாழத்தான் உசுரோட வாழுறேன்…

பெண் : குடுசையும் அரண்மனை…
இது காதல் சாதன…
காடெல்லாம் உன் வாசன…
நெஞ்செல்லாம் உன் யோசன…
காத்த போல காலம் தாண்டி உலகத்தை வலம்வரும் உறவிதுவே…


Notes : Usuraiye Ulukkuthey Song Lyrics in Tamil. This Song from Thaen (2021). Song Lyrics penned by S.Gnanakaravel. உசுரையே உலுக்குதே பாடல் வரிகள்.


சிறுக்கி சீனிக்கட்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஞானகரவேல்செந்தில் கணேஷ் & ரமணியம்மாள்ஹாரிஸ் ஜெயராஜ்காப்பான்

Siriki Song Lyrics in Tamil


BGM

பெண் : பச்ச ஊதா மஞ்ச வெள்ள…
மச்சான் வந்தானே…
மச்சினிகத் துள்ள…

பெண் : பச்ச ஊதா மஞ்ச வெள்ள…
மச்சான் வந்தானே…
மச்சினிகத் துள்ள…

பெண் : மூச்சு கீச்சு மூட்டிச் செல்ல…
இங்க மச்சக்காரன்…
வாரான் பாரு அள்ள…

பெண் : இவன் இச்சு தந்தா…
பிச்சுக்குமே மூள…
ஐயோ… மன்மதனின்…
கொள்ளு பேரப் புள்ள…
ஆமா… மன்மதனின்…
கொள்ளு பேரப் புள்ள…
யம்மா… மன்மதனின்…
கொள்ளு பேரப் புள்ள…

பெண் : ராக்காயி மூக்காயி…
காக்காயி ராமாயி…
எங்கடி போனீங்க…
சோமாறி…

BGM

ஆண் : ஹேய்… சிறுக்கி சீனிக்கட்டி…
சிணுங்கி சிங்காரி…
அடி குத்தி நிக்கும்…
முன்னழகு முட்டுது கீறி…
மினுக்கி மீனுக்குட்டி…
தழுக்கி ஒய்யாரி…
அவ ஒத்த ஜட…
பின்னழகு எத்தனக் கோடி…

ஆண் : வனஜா கருப்பனோட…
ஊர மேஞ்சாளே…
ஆனா ராஜாவோட சேந்து…
வெள்ளப் புள்ளப் பெத்தாளே…
கிரிஜா கோயிலத்தான்…
சுத்தி வந்தாளே…
ஆனா ஜோடி தேடி…
ஆள் இல்லாம…
காஞ்சு நின்னாளே…

ஆண் : தெனமும் ரோட்டு மேல…
ரூட்டு விடும்…
போக்கு நல்லால…
அவள வால ஒட்ட…
நறுக்க வந்த கதிரு…
நான்தான்ல…

பெண் : சிறுக்கி ஏலா… சிறுக்கி…

ஆண் : சிறுக்கி…

ஆண் : சிறுக்கி சீனிக்கட்டி…
சிணுங்கி சிங்காரி…
அடி குத்தி நிக்கும்…
முன்னழகு முட்டுது கீறி…
மினுக்கி மீனுக்குட்டி…
தழுக்கி ஒய்யாரி…
அவ ஒத்த ஜட…
பின்னழகு எத்தனக் கோடி…

BGM

ஆண் : கட்டம் போட்ட சிலுக்கு சட்ட…
முட்டி மேல கைலி கட்டி…
வெட்ட வெளி புயலப் போல…
சுத்தி வர நாடோடி…
சப்பி போட்ட…
பனம் பழமா…
நட்டுக்கு நிக்கும் கோரமுடி…
பச்சப் புள்ள கஞ்சி குடிக்க…
நான்தான் இப்ப பூச்சாண்டி…

ஆண் : வேப்பங்குச்சி…
மறந்த அப்பத்தா…
உன் பொக்கையில…
பல் மொளைக்க வெக்கட்டா…
கேப்பை சோளம் நெல்லே…
போச்சேத்தா…
நீ பீசா தின்னு…
போலாங்காட்டி…
என்னாத்தா…

BGM

ஆண் : சிறுக்கி சீனிக்கட்டி…
சிணுங்கி சிங்காரி…
அடி குத்தி நிக்கும்…
முன்னழகு முட்டுது கீறி…
மினுக்கி மீனுக்குட்டி…
தழுக்கி ஒய்யாரி…
அவ ஒத்த ஜட…
பின்னழகு எத்தனக் கோடி…

BGM

ஆண் : கம்மாக்கர களத்துமேடு…
நெல்லு விளையும்…
பச்சக் காடு கட்டடமா…
மொளச்சு நின்னா…
கல்லத் திங்கப் போற நீ…

ஆண் : ஒத்த குடம்…
தண்ணி புடிக்க…
மல்லுக்கு நிக்கும்…
பொம்பளைங்க…
ஒத்துமையா…
பொங்கி எழுந்தா…
ஓடி வரும் காவேரி…

ஆண் : காசு பவுசு…
தூக்கிக் கடாசு…
நீ செத்தாலும்…
வெடிப்பாங்க பட்டாசு…
மாசு மவுசு…
போனா வராது…
அட அவுச்ச முட்ட…
ஆம்லெட்டாக மாறாது…

BGM

பெண் : சிறுக்கி சீனிக்கட்டி…
சிணுங்கி சிங்காரி…
அடி குத்தி நிக்கும்…
முன்னழகு முட்டுது கீறி…

குழு (பெண்கள்) : முட்டுது கீறி…

பெண் : மினுக்கி மீனுக்குட்டி…
தழுக்கி ஒய்யாரி…
அவ ஒத்த ஜட…
பின்னழகு எத்தனக் கோடி…

ஆண் : ஹேய்…
வனஜா கருப்பனோட…
ஊர மேஞ்சாளே…
ஆனா ராஜாவோட சேந்து…
வெள்ளப் புள்ளப் பெத்தாளே…
கிரிஜா கோயிலத்தான்…
சுத்தி வந்தாளே…
ஆனா ஜோடித் தேடி…
ஆள் இல்லாம…
காஞ்சு நின்னாளே…

ஆண் : தெனமும் ரோட்டு மேல…
ரூட்டு விடும்…
போக்கு நல்லால…
அவள வால ஒட்ட…
நறுக்க வந்த கதிரு…
நான்தான்ல…

ஆண் : கதிரு…
க… க… கதிரு…
கதிரு…
க… க… கதிரு…


Notes : Siriki Song Lyrics in Tamil. This Song from Kaappaan (2019). Song Lyrics penned by S. Gnanakaravel. சிறுக்கி பாடல் வரிகள்.