சுத்தமுள்ள நெஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்கருமேகங்கள் கலைகின்றன

Suththamulla Nenjam Song Lyrics in Tamil


BGM

பெண் : சுத்தமுள்ள நெஞ்சம்… ஓஓ…
சுத்தி சுத்தி கொஞ்சும்…
பால போல உள்ளம்… ஓஓ…
பாசத்துக்கு கெஞ்சும்…

பெண் : இது போல் ஒரு உறவு…
இந்த உலகில் இருக்கா…
இதயம் தேடும் இதயம் போல…
புனிதம் இருக்கா…

பெண் : கண்ணிலே சிந்தும் நீருக்கு…
ஒரு கணக்கு இருக்கா…
கூடி வந்த பந்தம்… ஓஓ…
சாகும் வரை சொந்தம்…
கூடி வந்த பந்தம்… ஓஓ…
சாகும் வரை சொந்தம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : பாசங்கள் பாதி நேசங்கள் பாதி…
அன்பு வந்த பின்னே…
மண்ணில் நானும் வாழ…
தெம்பு வந்ததெனக்கு…

பெண் : பாழ்பட்ட நிலத்தில்…
பால் மழை விழுந்தா…
புத்தம் புது பச்சை கச்சை கட்டி கொண்டு…
புல்லு வரும் மொளச்சி…

பெண் : கடலை தாண்டியும் மண்ணிருக்கு…
உடலைத் தாண்டியும் அன்பிருக்கு…
மாதாவின் கோலத்தில் மனித உருவத்தில்…
தெய்வங்கள் இங்கிருக்கு…

பெண் : சோத்துக்கேத்த உப்பு… ஓஓ…
சொந்தமென்ன தப்பு…
சோத்துக்கேத்த உப்பு… ஓஓ…
சொந்தமென்ன தப்பு…

பெண் : இது போல் ஒரு உறவு…
இந்த உலகில் இருக்கா…
இதயம் தேடும் இதயம் போல…
புனிதம் இருக்கா…

பெண் : கண்ணிலே சிந்தும் நீருக்கு…
ஒரு கணக்கு இருக்கா…
கூடி வந்த பந்தம்… ஓஓ…
சாகும் வரை சொந்தம்
கூடி வந்த பந்தம்… ஓஓ…
சாகும் வரை சொந்தம்…

BGM

பெண் : சொந்தங்கள் அனைத்தும்…
தொடர்வதுமில்லை…
பந்தங்கள் சில பந்தங்கள் வந்து…
கலைவதுமில்லை…

பெண் : வெயிலுக்கு குடையாய்…
புயலுக்கு துணையாய்…
கருணையில் உடன் துணைவர…
ஒரு காரணமில்லை…

பெண் : காவலை போல் ஒரு சொந்தமுண்டா…
கண்ணீரை போல் ஒரு தீர்த்தமுண்டா…
தியாகத்தைப் போலொரு தெய்வ குணத்தினை…
உலகத்தில் பார்ததுண்டா…

பெண் : சுத்த மனம் போல… ஓஓ…
சொந்த பந்தம் இல்ல…
சுத்த மனம் போல… ஓஓ…
சொந்த பந்தம் இல்ல…

பெண் : இது போல் ஒரு உறவு…
இந்த உலகில் இருக்கா…
இதயம் தேடும் இதயம் போல…
புனிதம் இருக்கா…

பெண் : கண்ணிலே சிந்தும் நீருக்கு…
ஒரு கணக்கு இருக்கா…
கூடி வந்த பந்தம்… ஓஓ…
சாகும் வரை சொந்தம்…
கூடி வந்த பந்தம்… ஓஓ…
சாகும் வரை சொந்தம்…


Notes : Suththamulla Nenjam Song Lyrics in Tamil. This Song from Karumegangal Kalaigindrana (2023). Song Lyrics penned by Vairamuthu. சுத்தமுள்ள நெஞ்சம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading