pathinettu-vayathil-song-lyrics-in-tamil
பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண் & சாதனா சர்கம்வித்யாசாகர்வில்லன்

Pathinettu Vayathil Song Lyrics in Tamil


BGM

ஆண் : பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…

பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்…
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…

ஆண் : தோப்புக்குள் குயிலின் சத்தம்…
தோட்டத்தில் குருவி சத்தம்…
கன்னி பெண் காதில் தொட்டால்…
ஏது பிடிக்கும்…

பெண் : வாய் வைத்து வாயை மூட…
வாய் பேசா பெண்ணுக்காக…
வாதாடும் வல்வி சத்தம்…
அது பிடிக்கும்…

BGM

ஆண் : ஹே… பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…

BGM

ஆண் : மார்கழி மாதத்தில் குளிர் அடித்தால்…
கம்பளி போர்வையில் ஏது பிடிக்கும்…

BGM

பெண் : ஓ… மார்புக்குள் நீ என்னை மூடிக்கொண்டால்…
பக்கத்தில் பாய்கின்ற வெப்பம் பிடிக்கும்…

ஆண் : தண்ணீர் ஓா் பக்கம் உண்டாம்…
வெந்நீர் ஓா் பக்கம் உண்டாம்…
பெண்ணே நீராடி கொள்ள…
ஏது பிடிக்கும்…

பெண் : ஆ… முத்தம் என்னும் தீர்த்தம் கொண்டு…
ரத்தம் அது உறையும் வண்ணம்…
நித்தம் நீராட வேண்டும்…
அது பிடிக்கும்…

ஆண் : தித்திக்கும் உதட்டில் தீ பிடிக்கும்…

BGM

ஆண் : ஹே… பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…

பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்…
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…

BGM

ஆண் : தாயோடு தங்கையும் துணை இருக்க…
யாரோட தூங்கிட மிக பிடிக்கும்…

BGM

பெண் : தாயோடு தங்கையை துரத்தி விட்டு…
தலையணையை கட்டிகொண்டு தூங்க பிடிக்கும்…

ஆண் : பூப்போல் ஒரு தீண்டலுமுண்டு…
புயல் போல் ஒரு சீண்டலுமுண்டு…
ஏன்டி உன் தேகத்துக்கு…
ஏது பிடிக்கும்…

பெண் : பூப்போல் ஒரு தீண்டல் தீண்டி…
புயல் போல் என்னை சீண்டி சீண்டி…
புதிதாய் ஒரு வித்தை காட்டு…
அது பிடிக்கும்…

ஆண் : பெண்ணுக்குள் பேரின்பம் வேர் பிடிக்கும்…

BGM

ஆண் : ஹே… பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…

பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்…
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…

ஆண் : தோப்புக்குள் குயிலின் சத்தம்…
தோட்டத்தில் குருவி சத்தம்…
கன்னி பெண் காதில் தொட்டால்…
ஏது பிடிக்கும்…

பெண் : வாய் வைத்து வாயை மூட…
வாய் பேசா பெண்ணுக்காக…
வாதாடும் வல்வி சத்தம்…
அது பிடிக்கும்…

BGM


Notes : Pathinettu Vayathil Song Lyrics in Tamil. This Song from Villain (2002). Song Lyrics penned by Vairamuthu. பதினெட்டு வயசில் பாடல் வரிகள்.