மேகங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்கருமேகங்கள் கலைகின்றன

Megangal Song Lyrics in Tamil


BGM

பெண் : மேகங்கள் கலைந்ததென்ன…
வானம் தொலைந்ததென்ன…
உயிரைத் துரத்திக் கொண்டே…
உடல்கள் அலைவதென்ன…

பெண் : மேகங்கள் கலைந்ததென்ன…
வானம் தொலைந்ததென்ன…
உயிரைத் துரத்திக் கொண்டே…
உடல்கள் அலைவதென்ன…
உயிர்கள் அலைவதென்ன…

BGM

பெண் : உறவு பிரிவதால் உணர் பிரியுமா…
உண்மைக்குத் தூக்கம் வருமா…
குளத்தில் வீழ்வதால் நிழலும் நனையுமா…
நெஞ்சுக்குள் வலி நிற்குமா…

பெண் : வாழ்வு தேடியே வாழ்வு தீருமா…
பாதை தீராலாம் பயணம் தீருமா…
அலையும் பிழைப்பிலே அமைதி கிடைக்குமா…
உன் அன்பு உன்னை தொடுமா…

பெண் : மேகங்கள் கலைந்ததென்ன…
வானம் தொலைந்ததென்ன…
உயிரைத் துரத்திக் கொண்டே…
உடல்கள் அலைவதென்ன…
உயிர்கள் அலைவதென்ன…

BGM

பெண் : திசையை தொலைத்தவன் தேடிப் போகிறான்…
செல்வது எந்த திசையோ…
உடைந்த தோள்களில் மலையைச் சுமப்பது…
உனக்கு வந்த விதியோ…

பெண் : முதுமை என்பதே உடலின் தண்டனை…
இளமை தவறுகள் முதுமை தண்டனை…
மனிதன் ஒருபக்கம் வாழ்க்கை ஒருபக்கம்…
இரண்டும் முரண் படுதே…

பெண் : மேகங்கள் கலைந்ததென்ன…
வானம் தொலைந்ததென்ன…
உயிரைத் துரத்திக் கொண்டே…
உடல்கள் அலைவதென்ன…
உயிர்கள் அலைவதென்ன…


Notes : Megangal Song Lyrics in Tamil. This Song from Karumegangal Kalaigindrana (2023). Song Lyrics penned by Vairamuthu. மேகங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top