சோதனை தீரவில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. ஜெயச்சந்திரன்மனோஜ் கியான்செந்தூரப்பூவே

Sothanai Theeravillai Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : கனவாக வந்த உறவு கலைந்து போனதம்மா…
கண்ணீரில் நனைந்த நெஞ்சு கலங்கி வாடுதம்மா…

ஆண் : சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க அழுத்திச் சொல்லுங்க…
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்ல…
வாழ்ந்து முடிச்சவன் கூட்டிக் கழிச்சான்…
கொண்டு போக இங்கு மிச்சமில்ல…

ஆண் : சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…

—BGM—

ஆண் : சொந்தம் இங்கே யாரோ யாரோ…
வந்த பந்தம் எல்லாம் கானல் நீரோ…
முத்தெடுக்கப் போனேன் நானே…
மூச்சடைச்சுப் போனேன் மானே…

ஆண் : பாசம் ஒரு வேஷம்தானே…
நம்புவது மோசம்தானே…

குழு : சொல்லுங்க சொல்லுங்க அழுத்திச் சொல்லுங்க…
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்ல…
பந்தத்தையும் ஒரு சொந்தத்தையும்…
நம்பிக் கிடப்பதில் இங்கே அர்த்தமில்ல…

ஆண் : சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…

—BGM—

குழு : யாரோ சொந்தம் யாரோ…
யாரோ யாரறிவாரோ…

—BGM—

ஆண் : ரோசாப்பூவூ எங்கே எங்கே…
அது ராசா மார்பில் ஆடும் அங்கே…

ஆண் : புத்திக் கெட்டுப் போனேன் தாயே…
பொட்டு வச்சு வாழ்க நீயே…
பூப்பறிச்ச பாவி நானே…
பூ முடிச்சு வாழ்க மானே…

ஆண் : நந்தவனம் ஒன்னு வெந்துவிடுமின்னு…
தண்ணி கொண்டுவந்து காத்திருந்தேன்…
அந்த வனத்திலே ஜீவநதி ஒன்னு…
வந்து கலப்பதைப் பார்த்திருந்தேன்…

ஆண் : சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…

—BGM—

Notes : Sothanai Theeravillai Song Lyrics in Tamil. This Song from Senthoora Poove (1988). Song Lyrics penned by Vairamuthu. சோதனை தீரவில்லை பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading