கண்ணின் மணியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராஇளையராஜாமனதில் உறுதி வேண்டும்

Kannin Maniyae Song Lyrics in Tamil

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா…
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா…
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா…

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…

BGM

பெண் : சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா…
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா…
சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா…
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்…
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்…

பெண் : ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை…
சம நீதி சேர்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை…
உலகமெல்லாம் விடிந்த பின்னும்…
உங்களின் இரவுகள் விடியவில்லை…

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா…
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா…
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா…

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…

BGM

பெண் : பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா…
தினம் ஏவள் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா…
பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா…
தினம் ஏவள் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா…
பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்…
இல்லாத ஏழையர்க்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கையில்லை…
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை…
கனவுகளில் மிதந்தப்படி கலங்குது மயங்குது பருவக்கொடி…

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா…
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா…
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா…

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…

Notes : Kannin Maniyae Song Lyrics in Tamil. This Song from Manathil Uruthi Vendum (1987). Song Lyrics penned by Vaali. கண்ணின் மணியே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading