கண்ணா வருவாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ரா & கே. ஜே. யேசுதாஸ்இளையராஜாமனதில் உறுதி வேண்டும்

Kanna Varuvaayaa Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கண்ணா வருவாயா கண்ணா வருவாயா…
மீரா கேட்கிறாள்…
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்…
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து…

பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்…
குழு : கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…

—BGM—

ஆண் : ஆ… நீல வானும் நிலவும் நீரும்…
நீயென காண்கிறேன்…

பெண் : உண்ணும்போதும் உறங்கும்போதும்…
உன் முகம் பார்க்கிறேன்…

ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது…
காய்ந்து போகும் பாற்கடல்…

பெண் : உன்னை இங்கு ஆடை போல…
ஏற்றுக்கொள்ளும் பூவுடல்…

ஆண் : வேறில்லையே பிருந்தாவனம்…
பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம்…
ஆண் : சொர்க்கம் இதுவோ…

ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்…
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து…

ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்…

—BGM—

ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு…
மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா…
மல்லிகைப் பஞ்சணை இட்டு…
மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா…

பெண் : மன்மத மந்திரம் சொல்லி…
வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா…
மன்மத மந்திரம் சொல்லி…
வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா…

ஆண் : கொடி இடை ஒடிவதன் முன்னம்…
மடியினில் எடுத்திடவா…

பெண் : மலர்விழி மயங்கிடும் வண்ணம்…
மதுரசம் கொடுத்திடவா…

ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே…
பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே…
ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே…

பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்…
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்…

பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து…
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்…

குழு : கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…


Notes : Kanna Varuvaayaa Song Lyrics in Tamil. This Song from Manathil Uruthi Vendum (1987). Song Lyrics penned by Vaali. கண்ணா வருவாயா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading