நான் போக்கிரிக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஎம். எஸ். விஸ்வநாதன்போக்கிரி ராஜா (1982)

Naan Pokkirikku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா…
பக்கத்துல பட்டுல ரோஜா…
போக்கிரிக்கு போக்கிரி ராஜா…
பக்கத்துல பட்டுல ரோஜா…

ஆண் : என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி… ஓஓ…
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி…

பெண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா…
பூத்திருக்கு பட்டுல ரோஜா…
போக்கிரிக்கு போக்கிரி ராஜா…
பூத்திருக்கு பட்டுல ரோஜா…

பெண் : என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி… ஓஹோ…
ஆண் : என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி…

—BGM—

பெண் : வெத்தலைய போட்டு செவந்தது என்னோட வாயி…
ஒட்டி ஒட்டி செவந்திருக்கு உன்னோட வாயி…
வெத்தலைய போட்டு செவந்தது என்னோட வாயி…
ஒட்டி ஒட்டி செவந்திருக்கு உன்னோட வாயி…

ஆண் : இரு உடம்பிருக்கு ஒரு மனசு நம்மோடதானே…
இனி தெனம் தெனமும் சொகம் இருக்கும் சிந்தாத தேனே…

—BGM—

ஆண் : இரு உடம்பிருக்கு ஒரு மனசு நம்மோடதானே…
இனி தெனம் தெனமும் சொகம் இருக்கும் சிந்தாத தேனே…

பெண் : தொட்டு தொட்டு சின்ன பொண்ண சூடா ஆக்குற…
தொந்தரவு செஞ்சு நீயும் ஏதோ கேக்குற…

பெண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா…
பூத்திருக்கு பட்டுல ரோஜா…

பெண் : என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி… ஓஹோ…
என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி…

—BGM—

ஆண் : மஞ்ச மோகம் மணமணக்குது எனக்கு முன்னாலே…
மனசுல குளிர் அடிக்குது எல்லாம் உன்னாலே…
மஞ்ச மோகம் மணமணக்குது எனக்கு முன்னாலே…
மனசுல குளிர் அடிக்குது எல்லாம் உன்னாலே…

பெண் : தெனம் காலையிலே மொறைக்கிரீக என்ன விஷயம்…
சாயுங் காலத்திலே சிரிக்கிரீக என்ன விஷமம்…

ஆண் : சுட்டி பொண்ணு கையு பட்டு ஸ்ருதி ஏறுது…
தொட்டுபுட்ட பின்னாலதான் மனம் மாறுது…

ஆண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா…
பக்கத்துல பட்டுல ரோஜா…
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி… ஓஓ…
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி…

—BGM—

பெண் : கோழிக்கறி கொழம்பிருக்கு பசி எடுக்கலையோ…
கூட வச்ச மீன் வறுவலும் மணம் புடிக்கலையோ…
கோழிக்கறி கொழம்பிருக்கு பசி எடுக்கலையோ…
கூட வச்ச மீன் வறுவலும் மணம் புடிக்கலையோ…

ஆண் : நீ ஊட்டி விட்டா பசி அடங்கும் மந்தாரக் குயிலே…
உன்ன ஓரசிக்கிட்டா மணமணக்கும் சிங்கார மயிலே…

பெண் : சொல்ல சொல்ல வெக்கம் வந்தது வெளையாடுது…
சொக்க வச்ச மச்சானுக்கு சொகம் ஏறுது…

ஆண் : நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா…
பக்கத்துல பட்டுல ரோஜா…
போக்கிரிக்கு போக்கிரி ராஜா…
பக்கத்துல பட்டுல ரோஜா…

ஆண் : என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி…
பெண் : ஓஓ… என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி…


Notes : Naan Pokkirikku Song Lyrics in Tamil. This Song from Pokkiri Raja (1982). Song Lyrics penned by Gangai Amaran. நான் போக்கிரிக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading