கடவுள் படைச்சான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எம். எஸ். விஸ்வநாதன்போக்கிரி ராஜா (1982)

Kadavul Padaichan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு…
மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு…

—BGM—

ஆண் : கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு…
மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு…

—BGM—

ஆண் : ஹான்… கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு…
மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு…

ஆண் : ஐயா மேலே சாமி வந்து ஆடும்…
சும்மா கேளு ஜோசியமே கூறும்…
ஐயா மேலே சாமி வந்து ஆடும்…
சும்மா கேளு ஜோசியமே கூறும்…

—BGM—

ஆண் : அந்தி பட்ட நேரத்திலே…
சந்திரனை ஒருத்தன் பார்த்தான்…
அவன் கூட வந்தவனோ சூரியந்தான் அதுன்னான்…
சந்திரனா சூரியனா சண்ட வந்து சேர்ந்ததய்யா…

ஆண் : இந்த நேரம் பார்த்து எதுக்கால ஒரு மனுஷன்…
தள்ளாடி தள்ளாடி தலை கீழா நடந்து வந்தான்…
சண்டை இட்ட ரெண்டு பேரும் சாட்சியா அவன வச்சு…
சந்திரனா சூரியனா சரியாய் நீ சொல்லு…
எனக்கு ஒண்ணும் தெரியாது…
நான் வெளி ஊருன்னு போட்டான் அவன்… ஹான்ன் ஹான்…

ஆண் : என்னதான் போட்டாலும் நிதானம்தான் தப்பாது…
இடுப்பு வேட்டி மட்டும் நிக்காதய்யா…

—BGM—

ஆண் : கன்னிய தாய் என்பேன்…
கிழவிய கண்ணே என்பேன்…
கண்ட்ரோல் கொஞ்சம் கூட குறையாதய்யா…

ஆண் : அட மீன் செத்தா கருவாடு…
நீ செத்தா வெறும் கூடு…
யாரு பெரியவன்டா டேய் தம்பி…

ஆண் : கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு…
மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு…
கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு…
மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு…

ஆண் : அட ஐயா மேலே சாமி வந்து ஆடும்…
சும்மா கேளு ஜோசியமே கூறும்…

—BGM—

ஆண் : ஒரு பெண்ணைப் பார்த்தேன்…
என்னம்மா கல்யாணம் ஆச்சான்னேன் ஆகலேன்னா…
குழந்த குட்டி இருக்கான்னேன் குடுத்தா பளார்ன்னு…
நான் விடுவேனா அடுத்த பெண்ண பார்த்து…
முன் கூட்டியே குழந்த குட்டி இருக்கான்னேன்…
ஆமாம் ரெண்டு கொழந்த இருக்குன்னா…
அப்புறம்தான் கல்யாணம் ஆச்சான்னு கேட்டேன்…
அன்னைக்குதான் தங்க பல்லு கட்ட வேண்டிய அவசியம் வந்தது…

ஆண் : விஸ்கிய போட்டேன்னா இங்கலீசு பாட்டெடுப்பேன்…
சாராயம் உள்ளே போனா தமிழ் பாட்டு…

—BGM—

ஆண் : கள்ளை குடிச்சேன்னா நாடோடிப் பாட்டு வரும்…
கல்லுக்கும் டான்சு வரும் அதை கேட்டு…

ஆண் : அட ஆகாயம் கால் மேலே…
பூலோகம் கை மேலே…
ஆடி காட்டுறேன் வா நைனா…

—BGM—

ஆண் : கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு…
மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு…
ஹான்… கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு…
மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு…

ஆண் : ஐயா மேலே சாமி வந்து ஆடும்…
சும்மா கேளு ஜோசியமே கூறும்…
ஐயா மேலே சாமி வந்து ஆடும்…
சும்மா கேளு ஜோசியமே கூறும்…


Notes : Kadavul Padaichan Song Lyrics in Tamil. This Song from Pokkiri Raja (1982). Song Lyrics penned by Kannadasan. கடவுள் படைச்சான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading