சோலைப் புஷ்பங்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. சுசீலா & கங்கை அமரன்இளையராஜாஇங்கேயும் ஒரு கங்கை

Solai Pushpangale Song Lyrics in Tamil


BGM

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…
சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

பெண் : கண்ணாளனைக் கண்டாலென்ன…
என் வேதனை சொன்னாலென்ன…
நல் வார்த்தைகள் தந்தாலென்ன…

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா…

ஆண் : கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா…
கங்கை வற்றி விடுமா…

பெண் : உன்னை எண்ணி மூச்சிருக்குது…
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது…
உன்னை எண்ணி மூச்சிருக்குது…
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது…

ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நெஞ்சு…
கொக்கு ஒண்ணு காத்திருக்குது…
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது…

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

ஆண் : என் தேவியைக் கண்டாலென்ன…
என் வேதனை சொன்னாலென்ன…
நல் வார்த்தைகள் தந்தாலென்ன…

ஆண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

BGM

பெண் : உன்னை மீறி ஒரு மாலை வருமா…
சொந்தம் மாறி விடுமா…
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா…
தன்னை விற்று விடுமா…

ஆண் : பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே…
நீர் வடிய நான் பொறுக்கல்லே…
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே…
நீர் வடிய நான் பொறுக்கல்லே…

பெண் : பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும்…
கல்யாணமாம் சாமி…

ஆண் : காவலுக்கு நாதி இல்லையா…
எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா…

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

ஆண் : என் தேவியைக் கண்டாலென்ன…
பெண் : என் வேதனை சொன்னாலென்ன…
ஆண் : நல் வார்த்தைகள் தந்தாலென்ன…

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…


Notes : Solai Pushpangale Song Lyrics in Tamil. This Song from Ingeyum Oru Gangai (1984). Song Lyrics penned by Vairamuthu. சோலைப் புஷ்பங்களே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading