செவப்பு சேலை கட்டிக்கிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சோமுL.R. ஈஸ்வரிவீரமணி & சோமுஅம்மன் பாடல்கள்

Sevappu Selai Song Lyrics in Tamil


BGM

பெண் : செவப்பு சேலை கட்டிக்கிட்டு…
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு…
வேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம்…

பெண் : செவப்பு சேலை கட்டிக்கிட்டு…
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு…
வேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம்…

பெண் : அவள் விருப்புடனே தொழுபவரின்…
வினைகளையே ஓட வைத்து…
பொறுப்புடனே நம்மை காக்க ஆடி வந்தாளாம்…

பெண் : மாரியம்மா கருமாரியம்மா…
மாரியம்மா கருமாரியம்மா…

BGM

பெண் : சிறப்புடனே பவனி வந்து…
சிந்தையிலே குடி புகுந்து…
சிறப்புடனே பவனி வந்து…
சிந்தையிலே குடி புகுந்து…
கருணை மனம் கொண்டு…
நம்மை காக்க வந்தாளாம்…

பெண் : அவ மரகதத்தில் திலகமிட்டு…
மரிக்கொழுந்து மலரெடுத்து…
மரகதத்தில் திலகமிட்டு…
மரிக்கொழுந்து மலரெடுத்து…
சிரத்தினிலே சூடிக்கொண்டு பவனி வந்தாளாம்…

பெண் : மாரியம்மா கருமாரியம்மா…
மாரியம்மா கருமாரியம்மா…

BGM

பெண் : உன் வேப்பிலையும் திருநீரும்…
வேண்டியதை தந்திடுமே அம்மா…
காப்பது உன் திரிசூலம்…
கவலை யாவும் தீரும் அம்மா…

பெண் : மாபெரும் பக்தர்கள் கூட்டம்…
உன் சன்னதியில் அம்மா…
ஆபத்தில் உதவிட உன் ஆயிரம்…
கைகள் அணைத்திடுமே அம்மா…

பெண் : தொட்டியங்குளந்தன்னில் வாழும் எங்க மகமாயி…
மட்டில்லாத பாசம் கொண்ட எங்க மகமாயி…

பெண் : சக்தியிலே நெருப்பெடுத்து சதிராடும் மாரி…
சக்தியிலே நெருப்பெடுத்து சதிராடும் மாரி…
கட்டி காக்கும் அன்னை போல காத்திடுவாள் மாரி…
கட்டி காக்கும் அன்னை போல காத்திடுவாள் மாரி…

பெண் : செவப்பு சேலை கட்டிக்கிட்டு…
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு…
வேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம்…

பெண் : அவள் விருப்புடனே தொழுபவரின்…
வினைகளையே ஓட வைத்து…
பொறுப்புடனே நம்மை காக்க ஆடி வந்தாளாம்…

பெண் : மாரியம்மா கருமாரியம்மா…
மாரியம்மா கருமாரியம்மா…
கருமாரியம்மா…


Notes : Sevappu Selai Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Somu. செவப்பு சேலை கட்டிக்கிட்டு பாடல் வரிகள்.


Scroll to Top