செந்தாழம் பூவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமுள்ளும் மலரும்

Senthazham Poovil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
அம்மம்மா ஆனந்தம்…

—BGM—

ஆண் : வளைந்து நெளிந்து போகும் பாதை…
மங்கை மோக கூந்தலோ…

—BGM—

ஆண் : மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்…
பருவ நாண ஊடலோ…

ஆண் : ஆலங்கொடி மேலே கிளி…
தேன் கனிகளை தேடுது…
ஆசை குயில் பாஷை இன்றி…
ராகம் என்ன பாடுது…
காடுகள் மலைகள் தேவன் கலைகள்…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

—BGM—

ஆண் : அழகு மிகுந்த ராஜகுமாரி…
மேகமாக போகிறாள்…

—BGM—

ஆண் : ஜரிகை நெளியும் சேலை கொண்டு…
மலையை மூட பார்க்கிறாள்…

ஆண் : பள்ளம் சிலா் உள்ளம் என…
ஏன் படைத்தான் ஆண்டவன்…
பட்டம் தர தேடுகின்றேன்…
எங்கே அந்த நாயகன்…
மலையின் காட்சி இறைவன் ஆட்சி…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில்…வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

—BGM—

ஆண் : இளைய பருவம் மலையில் வந்தால்…
ஏகம் சொர்க்க சிந்தனை…
இதழை வருடும் பனியின் காற்று…
கம்பன் செய்த வர்ண்தனை…

ஆண் : ஓடை தரும் வாடை காற்று…
வான் உலகை காட்டுது…
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று…
எங்கோ என்னை கூட்டுது…
மறவேன் மறவேன் அற்புத காட்சி…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
அம்மம்மா ஆனந்தம்…


Notes : Senthazham Poovil Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Kannadasan. செந்தாழம் பூவில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading