ராமன் ஆண்டாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமுள்ளும் மலரும்

Raman Aandalum Song Lyrics in Tamil


—BGM—

குழு : லே லே லே லே லே லே லே லே…
லே லே லே லே லே லே லே லே…
அம்மனைக் கும்பிட்டா…
நமக்கெல்லாம் நல்லதே நடக்குமே…
கெட்டதை அம்மனும் கொடுக்காதே…
லே லே லே லே லே லே லே லே…
லே லே லே லே லே லே லே லே…

—BGM—

ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலையில்லே…

ஆண் : நான்தான்டா என் மனசுக்கு ராஜா…
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா…
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்…
கேக்குற வரத்தை கேட்டுக்கோடா…

ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலையில்லே…

—BGM—

ஆண் : யானையக் கொண்டாங்க…
குதுரையக் கொண்டாங்க…
நானும் ஊர்கோலம் போக…

—BGM—

ஆண் : யானையக் கொண்டாங்க…
குதுரையக் கொண்டாங்க…
நானும் ஊர்கோலம் போக…

ஆண் : வாழை தென்னை மாவிலையெல்லாம்…
தொங்கணும் தோரணமாக…
ஏன்டா டேய் ராணியக் கூப்பிடு…
அவளோட சேடியும் கூப்பிடு…
ஏ… மதுர ராஜ்ஜியம் என்னுது…
ஒனக்கொரு பாதியக் கொடுக்கிறேன்டா…

ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலையில்லே…

குழு : லே லே லே லே லே லே லே லே…
லே லே லே லே லே லே லே லே…
சந்தனம் பூசுங்க…
சாமிய நேரில பாருங்க…
என்ன வேணும் அத கேளுங்க…
லே லே லே லே லே லே லே லே…
லே லே லே லே லே லே லே லே…

ஆண் : பொன்னா பூப்பூத்து வைரம் காயாக…
காய்க்கும் என்னோட தோட்டம்…

—BGM—

ஆண் : பொன்னா பூப்பூத்து வைரம் காயாக…
காய்க்கும் என்னோட தோட்டம்…

ஆண் : மாசம் மூணு போகம் வெளையும்…
லாபம் மேலும் கூடும்…
கையிருக்கு உழச்சி காட்டுறேன்…
மனசிருக்கு பொழச்சி பாக்குறேன்…
ஏய் போனா போகுது வேல…
ஒனக்கொரு வேலையக் கொடுக்கிறேன்டா…

ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலையில்லே…

குழு : லே லே லே லே லே லே லே லே…
லே லே லே லே லே லே லே லே…
பொன்னான பல்லக்கு…
முல்லப்பூ மாலையும் சாமிக்கு…
போட்டுட்டு சொல்லி சொல்லி பாடுங்க…
லே லே லே லே லே லே லே லே…
லே லே லே லே லே லே லே லே…

—BGM—

ஆண் : ஊரும் கொண்டாட…
உலகம் கொண்டாட…
ஊர்கோலம் போகும் சாமி…

—BGM—

ஆண் : ஊரும் கொண்டாட…
உலகம் கொண்டாட…
ஊர்கோலம் போகும் சாமி…

ஆண் : நாடும் வீடும் நல்லா வாழ…
நீதான் நேர்வழி காமி…
சாதி சனம் ஒன்னாக சேந்தது…
சாமியத்தான் எல்லாரும் கேக்குது…
நீ கேட்டா கேட்டதை கொடுக்கற…
சாமியப் பாத்து கேளுங்கடா…

ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலையில்லே… ஹோய்…

ஆண் : நான்தான்டா என் மனசுக்கு ராஜா…
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா…
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்…
கேக்குற வரத்தை கேட்டுக்கோடா…

ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலையில்லே… ஹோய்…

—BGM—


Notes : Raman Aandalum Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Gangai Amaran. ராமன் ஆண்டாலும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading