கள்வரே கள்வரே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்ராவணன்

Kalvare Song Lyrics in Tamil


BGM

பெண் : கள்வரே கள்வரே…
கள்வரே கள்வரே…
கண்புகும் கள்வரே…
கை கொண்டு பாரீரோ…
கண் கொண்டு சேரீரோ…
கலை சொல்லி தாரீரோ…

பெண் : உம்மை எண்ணி உம்மை எண்ணி…
ஊமைக் கண்கள் தூங்காது…
தலைவா என் தலைவா…
அகம் அறிவீரோ… அருள் புரிவீரோ…

பெண் : வாரந்தோறும் அழகின் பாரம்…
கூடும் கூடும் குறையாது…
உறவே என் உறவே…
உடை களைவீரோ உடல் அணிவீரோ…

BGM

பெண் : என் ஆசை என் ஆசை…
நானா சொல்வேன்…
என் ஆசை நானா சொல்வேன்…
என் ஆசை நீயே சொன்னால்…
கண்ணாலே ஆமாம் என்பேனே…

பெண் : எங்கெங்கே உதடு போகும்…
அங்கெங்கே உயிரும் போகும்…
அன்பாலே ஆளச் சொல்வேனே…

பெண் : வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்…
தமிழுக்குத் தெரிகின்றதே…
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்…
தங்களுக்குத் தெரிகின்றதா…

பெண் : கள்வரே கள்வரே…
கள்வரே கள்வரே…
கண்புகும் கள்வரே…
கை கொண்டு பாரீரோ…
கண் கொண்டு சேரீரோ…
கலை சொல்லி தாரீரோ…

பெண் : கள்வரே கள்வரே…
கள்வரே கள்வரே…
கண்புகும் கள்வரே…
கை கொண்டு பாரீரோ…
கண் கொண்டு சேரீரோ…
கலை சொல்லி தாரீரோ…
கலை சொல்லி தாரீரோ…

BGM


Notes : Kalvare Song Lyrics in Tamil. This Song from Raavanan (2010). Song Lyrics penned by Vairamuthu. கள்வரே கள்வரே பாடல் வரிகள்.


Scroll to Top