| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| காளிதாசன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | தேவா | புருஷ லட்சணம் |
Sempattu Poove Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…
ஆண் : மண்ணிலே ஒரு வெண்ணிலா…
கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா…
குளிர் மேகம் உந்தன் கண்ணிலா…
குயில் பாடும் கீதம் சொல்லிலா…
ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…
—BGM—
ஆண் : காஞ்சி பட்டுடுத்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ…
கால பிரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ…
மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும்…
பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும்…
புன்னகைதான் பொன்னகையோ கன்னிகை வா வா வா…
ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…
—BGM—
பெண் : பூவின் நெஞ்சுக்குள்ளே புதுவித போதை துள்ளியதே… ஏ…
காதல் பள்ளியிலே படித்திட ஆசை சொல்லியதே… ஏ…
பெண் : என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம்…
இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம்…
என் விழியில் உன் முகம்தான் வென்றது வா வா வா…
பெண் : செம்பட்டுப் பூவும் வெண் மொட்டுத் தேரும்…
ஸ்ரீரங்கனாதருக்கே… ஹோய்…
பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும்…
என்னுயிர் ராமனுக்கே… ஹோய்…
பெண் : மண்ணிலே வந்த வெண்ணிலா…
இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா…
குளிர் மேகம் உந்தன் கண்ணிலா…
குயில் கீதம் காதல் சொல்லிலா…
ஆண் : ஆஆஆ… செம்பட்டுப்பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…
Notes : Sempattu Poove Song Lyrics in Tamil. This Song from Purusha Lakshanam (1993). Song Lyrics penned by Kalidasan. செம்பட்டுப் பூவே பாடல் வரிகள்.

