சங்கீத ஜாதிமுல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகாதல் ஓவியம்

Sangeetha Jathimullai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தன்னந்த நம் த நம் தம்…
நம் த நம் தம்…
நம் த நம் தம்…
நம் த நம் தம்…
நம் த நம் தம்…

ஆண் : நம் தம் த நம் தம்…
நம் தம் த நம் தம்…
நம் தம் த நம் தம்…
நம் தம் த நம் தம்…
என்னாதமே வா…

ஆண் : சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை…
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை…
ராகங்களின்றி சங்கீதமில்லை…
சாவொன்றுதானா நம் காதல் எல்லை…
என் நாதமே வா வா… ஆஅ…

ஆண் : சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை…

—BGM—

ஆண் : திருமுகம் வந்து பழகுமோ…
அறிமுகம் செய்து விலகுமோ…
விழிகளில் துளிகள் வடியுமோ…
அது சுடுவதைத் தாங்க முடியுமோ…

ஆண் : கனவினில் எந்தன் உயிரும் உறவாகி…
விடிகையில் இன்று அழுது பிரிவாகி…
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ… ஓ…

ஆண் : திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது…
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது…
பொன்னி நதி… கன்னி நதி… ஜீவ நதி…

ஆண் : விழிகள் அழுதபடி…
கரங்கள் தொழுதபடி…
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி…
இசை எனும் மழை வரும்…
இனி எந்தன் மயில் வரும்…

ஆண் : ஞாபக வேதனை மீறுமோ…
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்…
ஆடிடுமோ… பாடிடுமோ…
ஆடிடுமோ… பாடிடுமோ… ஓஒ… ஓஒ…

ஆண் : ராஜ தீபமே…
எந்தன் வாசலில் வாராயோ…
குயிலே… குயிலே…
குயிலே… குயிலே…
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்…
ராஜ தீபமே… ஏ…

ஆண் : நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு…
அவள் நீதானே நீதானே…
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள்…
நீதானே நீதானே நீதானே…

ஆண் : விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்…
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்…

—BGM—

ஆண் : விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்…
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்…

ஆண் : நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்…

—BGM—

ஆண் : நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்…
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்…
தத்திச் செல்லும் முத்துச் சிற்பம்…
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்…

ஆண் : இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்…
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்…
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ…
கண்டுகொண்டும் இந்த வேஷம் என்ன…
ராஜ தீபமே…

ஆண் : ச ச நிச நிச நிச நிச நிச நிச…
கரி சநிரிச நித பத நி சரி…

—BGM—

ஆண் : ரிக ரித சதரிச நிசரி நிசரி…
சநிதப தசநி சநிதப மபகத…

—BGM—

ஆண் : ச நிசநி நிசநி நிசநி தப…
ப மதப நிச சநிதப மப…

—BGM—

ஆண் : சரிக சரிக ரிசரி கமப…
கமப கமப மபத பத நி…

—BGM—

ஆண் : ரிச நிசசநி தநி…
பத நி சச சநி தநி…
கரி சநி சநித ரிதப…

ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம்…

ஆண் : மகன யகன ரகன சகன…
யகன ரகன சகன தகன…
ரகன சகன தகன பகன…
சகன தகன பகன ககன…

ஆண் : மகன யகன ரகன சகன…
யகன ரகன சகன தகன…
ரகன சகன தகன பகன…
சகன தகன பகன ககன…

—BGM—


Notes : Sangeetha Jathimullai Song Lyrics in Tamil. This Song from Kadhal Oviyam (1982). Song Lyrics penned by Vairamuthu. சங்கீத ஜாதிமுல்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading