சாயாலி ஓ சாயாலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்.சத்ய பிரகாஷ் & சின்மயிசாம் சி.எஸ்.அடங்க மறு

Saayaali Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஹ்ம்ம்… ம்ம்…
ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்ம்…

ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

ஆண் : கண் கேட்கும்… கனா…
நெஞ்சுக்குள்… வினா…

பெண் : ஹ்ம்ம்… உன் நகம் வர…
சொல் முகவரி…
உன் உடன் வர…
ஏன் அனுமதி…

பெண் : தீராத நேரம் உன் கூட போதும்…
மாயாத நாள் மட்டும் நாம் வாழ வேணும்…
தீராத ஆசை ஓயாமல் தோணும்…
நாள் நேரம் பாராமல் தோள் சாய வேணும்…

ஆண் : ஓ சாயாலி… ஓ சாயாலி…
என்னுள் நீ பூகம்பம் செய்தாயடி…

ஆண் : ஓ சாயாலி… ஓ சாயாலி…
என்னை நீ வேரோடு பேத்தாயடி…

குழு (ஆண்கள் & பெண்கள்) : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…

ஆண் : என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…

பெண் : என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

—BGM—

பெண் : ஆழி போல் சூழ்ந்திடும் அன்பிலான வீடு இது…
ஓர் உயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது…

—BGM—

ஆண் : ஆழி போல் சூழ்ந்திடும் அன்பிலான வீடு இது…
ஓர் உயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது…

பெண் : ஓஓ… தூரத்து வானத்தில் மழை போல சந்தோசம்…
என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்…

ஆண் : பள்ளங்கள் இல்லாத பாசங்கள் கொண்டு இங்கு…
காற்றும் இங்கே தாலாட்டு மீட்கும்…

பெண் : தேவைகள் வேறில்லை…
நாங்களும் வாழ்ந்திட…

ஆண் : அன்பினில் வாழ்கிறோம்…
இன்பம் கூடிட…

பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னுள்ளே பூகம்பம் செய்தாயே நீ…

பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னை நீ வேரோடு பேத்தாயே நீ…

—BGM—

ஆண் : நீ இல்லா நாழிகை…
தீயில் வேகும் ஓர் நிலை…
கூடவே நீ வர…
கூறு நீயும் யோசனை…

—BGM—

பெண் : தேய் நிலா ஆகிறேன்…
தூரம் நீயும் போகையில்…
வா உலா போகலாம்…
கூடல் கூடும் வேலையில்…

ஆண் : என் கண்ணின் சாரத்தில் உன் பிம்ப மீறல்கள்…
ஏனோ என்னை தோற்பிக்க தானோ…

பெண் : கண்ணாடி நெஞ்சம் மேல் உன் அன்பின் பாரங்கள்…
ஏனோ என் நெஞ்சை சில்லாக்க தானோ…

ஆண் : ஏன் இனி தாமதம்…
வா உடன் வாழ்ந்திட…

பெண் : நாட்களும் தீரும்முன்…
சேர்வோம் வாழ்ந்திட…

பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னுள்ளே பூகம்பம் செய்தாயே நீ…

பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னை நீ வேரோடு பேத்தாயே நீ…

ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

ஆண் : சாயாலி… சாயாலி…
ஓ சாயாலி… ஓ சாயாலி…
சாயாலி… சாயாலி…
ஓ சாயாலி ஓ சாயாலி…

ஆண் : சாயாலி சாயாலி…
சாயாலி… சாயாலி…
சாயாலி… சாயாலி…
வருவேனே என் சாயாலி…


Notes : Saayaali Song Lyrics in Tamil. This Song from Adanga Maru (2018). Song Lyrics penned by Sam C. S. சாயாலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading