ராத்திரியில் பாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன், மனோ & மின்மினிஇளையராஜாஅரண்மனை கிளி

Rathiriyil Paadum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…

பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…

ஆண் : போடு நிலாச் சோறு…
என் பொன்னுமணி தேரு…

பெண் : கூட வந்து சேரு…
நான் சொட்டும் கனிச் சாறு…

ஆண் : ஹே ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…

பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…

—BGM—

ஆண் : கள்ளழகர் வைகை ஆற்றில்…
கால வைக்கும் நல்ல நாளில்…
எட்டு பட்டி ஊரு சனம்…
கட்டுச் சோறு கட்டி வரும்…

பெண் : சொக்கனுக்கு மீனாள் போலே…
தக்க துணை வாச்சதாலே…
சின்னஞ்சிறு ஜோடி எல்லாம்…
சித்திரையில் இங்கு வரும்…

ஆண் : உன் மேலதான் ஆச வச்சேன்…
வேறெதுக்கு மீசை வச்சேன்…

பெண் : என் புருஷன் நீயாகத்தான்…
போன சென்மம் பூச வச்சேன்…

ஆண் : உன்னோடுதான் நானும் கூட…
என்னோடு தான் நீ கூட…
போடு முந்தானை… ஹே…

பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…

ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…

பெண் : கூட வந்து சேரு…
நான் சொட்டும் கனிச் சாறு…

ஆண் : ஆ… போடு நிலாச் சோறு…
என் பொன்னுமணி தேரு…

—BGM—

ஆண் : எல்லோருக்கும் எழுதி வச்சான்…
எங்களைத்தான் கட்டி வச்சான்…
பொன்ஜாதியோ பூன்தோரணம்…
நானோ ரொம்ப சாதாரணம்…

ஆண் : வெண்ணிலவ மேகம் போல…
என்ன அவ மூடி வைப்பா…
மத்தவங்க கண்ணுபட்டா…
தத்தளிப்பா தான் தவிப்பா…

ஆண் : ஊருக்கவ ராணி போல…
எனக்கு அவ அம்மன் போல…
சொல்ல போனா என்ன போல…
பாக்யவான் யாரும் இல்லை…

ஆண் : தாரம் கூட தாயைப் போல…
ஈடு சொல்ல யாரும் இல்லை…
எல்லாம் என் யோகம்…

ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…
ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…

ஆண் : போடு நிலாச் சோறு…
என் பொன்னுமணி தேரு…
கூட வந்து சேரு…
நான் சொட்டும் கனிச் சாறு…

ஆண் : ஹே ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…
ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…


Notes : Rathiriyil Paadum Song Lyrics in Tamil. This Song from Aranmanai Kili (1993). Song Lyrics penned by Vaali. ராத்திரியில் பாடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading