ராசாளி ராசாளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசத்ய பிரகாஷ் & ஷாஷா திருப்பதிஏ. ஆர். ரகுமான்அச்சம் என்பது மடமையடா

Rasaali Rasaali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு…
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு…
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்…
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே…

பெண் : பறவை போல் ஆகினேன்…
போல் ஆகினேன் இன்று…
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று…

ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா…
நீ முந்தியா நான் முந்தியா…
பார்ப்போம் பார்ப்போம்…
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை…
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல…
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல…
கனவுகள் வருதே கண்ணின் வழியே…
என் தோள் மீது நீ நான் குளிர்காய்கின்ற தீ…

—BGM—

ஆண் : எட்டுத் திசை முட்டும் எனை பகலினில்…
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்…
எட்டும் ஒரு பட்டுக்குரல் மனதினில் மடிவேனோ…

ஆண் : முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்…
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்…
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ…

ஆண் : எட்டுத் திசை முட்டும் எனை பகலினில்…
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்…
எட்டும் ஒரு பட்டுக்குரல் மனதினில் மடிவேனோ…

ஆண் : முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்…
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்…
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ…

ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா…
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை…
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…

—BGM—

பெண் : நின்னுக் கோரி…
நின்னுக் கோரி… நின்னுக் கோரி…
ஓ நான் உஷா…
நின்னுக் கோரி…
உன்னால் நான்…
நின்னுக் கோரி கோரி…

பெண் : வெயில் மழை வெட்கும்படி நனைவதை…
விண்மீன்களும் விண்ணாய் எனைத் தொடா்வதை…
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே…

பெண் : முன்னும் இதுபோலே புது அனுபவம் …
கண்டேன் என சொல்லும்படி நினைவிலே…
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே…

பெண் : வெயில் மழை வெட்கும்படி நனைவதை…
விண்மீன்களும் விண்ணாய் எனைத் தொடா்வதை…
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே…

பெண் : முன்னும் இதுபோலே புது அனுபவம் …
கண்டேன் என சொல்லும்படி நினைவிலே…
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே…

ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா…
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை…
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…

ஆண் : மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல…
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல…
கனவுகள் வருதே கண்ணின் வழியே…
என் தோள் மீது நீ நான் குளிர்காய்கின்ற தீ…

ஆண் : என் தோள் மீது நீ…
நான் குளிர்காய்கின்ற தீ…
குளிர்காய்கின்ற தீ…
குளிர்காய்கின்ற தீ…


Notes : Rasaali Rasaali Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Thamarai. ராசாளி ராசாளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading