ஒன்றா ரெண்டா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Ondra Renda Song Lyrics in Tamil


பெண் (வசனம்) : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…

ஆண் (வசனம்) : சொல்லு…

குழு (பெண்கள்) : ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் கனவில்… ஆ ஹா…
நான் கண்ட… ஆ ஹா…
நாளிது தான் கலாபக்காதலா…
பார்வைகளால்… ஆ ஹா…
பல கதைகள்… ஆ ஹா…
பேசிடலாம் கலாபக்காதலா…

பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

—BGM—

பெண் : பெண்களை நிமிர்ந்து பார்த்திட…
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே…
கண்களை நேரா பாத்து தான்…
நீ பேசும் தோரணை பிடிக்குதே…

பெண் : தூரத்தில் நீ வந்தாலே…
என் மனசில் மழையடிக்கும்…
மிகப்பிடித்த பாடல் ஒன்றை…
உதடுகளும் முணுமுணுக்கும்…

பெண் : மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்…
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்…

—BGM—

பெண் : உனது கண்களில்…
எனது கனவினை காண போகிறேன்…

பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

—BGM—

பெண் : சந்தியாக் கால மேகங்கள்…
உன் வானில் ஊர்வலம் போகுதே…
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே…
உன் நடையின் சாயலே தோணுதே…

பெண் : நதிகளிலே நீராடும்…
சூரியனை நான் கண்டேன்…
வேர்வைகளின் துளி வழிய…
நீ வருவாய் என நின்றேன்…

பெண் : உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்…
நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும்…
மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே…
சாகத் தோன்றுதே… தோன்றுதே…

—BGM—

பெண் : அன்பே இரவை கேட்கலாம்…

குழு (பெண்கள்) : இரவை கேட்கலாம்…

பெண் : விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

குழு (பெண்கள்) : இரவே நீளுமா…

பெண் : என் கனவில்… ஆ ஹா…
நான் கண்ட… ஆ ஹா…
நாளிது தான் கலாபக்காதலா…
பார்வைகளால்… ஆ ஹா…
பல கதைகள்… ஆ ஹா…
பேசிடலாம் கலாபக்காதலா…


Notes : Ondra Renda Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. ஒன்றா ரெண்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading