ராசா மகராசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்சீன் ரோல்டன்சீன் ரோல்டன்முண்டாசுப்பட்டி

Rasa Magarasa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ராசா மகராசா எங்கய்யா…
உன் ராசாங்கம் சரிஞ்சாசோ சொல்லையா…

ஆண் : கண்ணோடு நீ இருந்த…
கண்மூடி ஏன் பறந்த…
ராசா நீ என் ரோசா…

ஆண் : ராணி மகராணி கலைவாணி…
என் ராத்தூக்கம் பறிபோச்சு மருதாணி…

ஆண் : பொன்னான உன் காதில்…
என் ஆச சொன்னேனே…
ராணி நீ என் தேனீ…

—BGM—

ஆண் : எது ஒரு வார்த்தை சொன்னாயோ…
நீ எமனோட உறவாட நின்னாயோ…
ஐயோ என்ன பெத்த ராசாவே எந்திரிக்க மாட்டாயோ…
ராசா ராசா ராசா…

ஆண் : நீதான் எனக்காக வர வேணும்…
உன் நெஞ்சுக்குள்ள இடம் ஒன்னு தர வேணும்…

ஆண் : உன்னோட ஒரு வார்த்தை…
என்னோட மறு வாழ்க்க…
நீயும் நானும் சேர…

—BGM—

ஆண் : காலை என்ன மாலை என்ன காத்திருக்க…
காலம் என்ன நேரம் என்ன பூத்திருக்க…
அள்ளிக்கொள்ள பின்னிக்கொள்ள…

ஆண் : காவியங்கள் வந்து நின்று பேறு சொல்ல…
காரணங்கள் ஏதும் இங்கு தேவையில்ல…
கண்டுகொள்ள ஏதுமில்ல…

ஆண் : தொட்டாலும் பரவாத நோயம்மா…
அது விட்டாலும் விலகாது பாரம்மா…

ஆண் : தேகத்த பூட்டி வைக்கும்…
தேசத்தை ஆட்டி வைக்கும்…
காதல் ஏது லேசா…


Notes : Rasa Magarasa Song Lyrics in Tamil. This Song from Mundasupatti (2014). Song Lyrics penned by Muthamil. ராசா மகராசா பாடல் வரிகள்.


Scroll to Top