| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| முத்தமிழ் | ஹரிசரண் & கல்யாணி நாயர் | சீன் ரோல்டன் | முண்டாசுப்பட்டி |
Idhu Enna Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இது என்ன கண்ணில் தாவுது…
ஒரு மான் இங்கு…
இதமொன்று நெஞ்சில் காயுது…
அது ஏன் இங்கு…
சொட்டு சொட்டாய் என் மனதை சுண்டுகிறாள்…
ஆண் : ஏக்கங்கள் நான் கொள்ள…
தாக்கங்கள்தான் இன்று சந்திக்கிறேன்…
தூக்கங்கள் ஏன் இல்லை…
நேற்று வரை என்று சிந்திக்கிறேன்…
ஆண் : நெளிகின்றேன் பொறிகின்றேன்…
விழுகின்றேன் அழுகின்றேன்…
கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள்…
—BGM—
ஆண் : பாலை நிலமென வாடுமா…
பாவை எனது ஆகுமா…
பாத நினைவுகள் ஆருமா…
பாதை இனி வீணாகுமா…
நாளை என்னாகும்…
ஏதும் சொல்லாதோ போராகுமோ…
ஆண் : நெளிகின்றேன் பொறிகின்றேன்…
விழுகின்றேன் அழுகின்றேன்…
கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள்…
ஆண் : ஹ்ம்ம்… விதை ஒன்று நெஞ்சில்…
வீசியதொரு மான் அன்று…
தளிர் ஒன்று கண்ணில் காணுகிறேன் நான் இன்று…
பொங்கி வந்து என் உயிரில் தாங்குகிறாள்…
—BGM—
Notes : Idhu Enna Song Lyrics in Tamil. This Song from Mundasupatti (2014). Song Lyrics penned by Muthamil. இது என்ன பாடல் வரிகள்.
