| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| சீன் ரோல்டன் & மனோஜ் குமார் கலைவாணன் | எஸ்.பி.பி. சரண் | சீன் ரோல்டன் | ரகு தாத்தா |
Poruthhiru Selva Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கை எட்டும் தூரம் வந்தும்…
தண்ணீர் பாம்பாய் நழுவி…
போனாலும் விடமாட்டேன்…
குறி பார்ப்பேன் அம்பை உருவி…
ஆண் : காட்டாறு வெள்ளம்போல்…
திரண்டோடிய காதல் அருவி…
குட்டைப்போல் தேங்கியதே…
அதில் மூழ்கி மறைந்தேன் மருவி…
ஆண் : பொறுத்திரு செல்வா…
பொறுத்திரு செல்வா…
திருநாள் விடியும்…
பொறுத்திரு செல்வா…
ஆண் : பொறுத்திரு செல்வா…
பொறுத்திரு செல்வா…
மணநாள் வரைக்கும்…
பொறுத்திரு செல்வா…
—BGM—
ஆண் : கூண்டும் ஒரு வீடென்பது…
புரியாமலே குற்றம் கண்டாள்…
காசு பணம் கேக்காமலே…
வாழ்க்கை தந்தேன் விலகிச்சென்றாள்…
ஆண் : பெண்ணியம் பேசும் பதறே…
உன் காதல் மொழி பொய்தானோ…
மணப்பெண் கோலம் பூண்டால்…
உன் சமத்துவ கூச்சலும் வீணோ…
ஆண் : பழமே நழுவி பாலில் விழுந்தால்…
பருகாமல் விடுவேனோ…
ஆண் : கை எட்டும் தூரம் வந்தும்…
தண்ணீர் பாம்பாய் நழுவி…
போனாலும் விடமாட்டேன்…
குறி பார்ப்பேன் அம்பை உருவி…
ஆண் : காட்டாறு வெள்ளம்போல்…
திரண்டோடிய காதல் அருவி…
குட்டைப்போல் தேங்கியதே…
அதில் மூழ்கி மறைந்தேன் மருவி…
ஆண் : பொறுத்திரு செல்வா…
பொறுத்திரு செல்வா…
திருநாள் விடியும்…
பொறுத்திரு செல்வா…
ஆண் : பொறுத்திரு செல்வா…
பொறுத்திரு செல்வா…
மணநாள் வரைக்கும்…
பொறுத்திரு செல்வா…
—BGM—
ஆண் : பொறுத்திரு செல்வா…
பொறுத்திரு செல்வா…
திருநாள் விடியும்…
பொறுத்திரு செல்வா…
Notes : Poruthhiru Selva Song Lyrics in Tamil. This Song from Raghu Thatha (2024). Song Lyrics penned by Sean Roldan & Manoj Kumar Kalaivanan. பொறுத்திரு செல்வா பாடல் வரிகள்.
