பூவா தலையா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்சித் ஶ்ரீராம் & அந்தோனி தாசன்சித் ஶ்ரீராம்வானம் கொட்டட்டும்

Poova Thalaiyaa Song Lyrics in Tamil


ஆண் : யாருமில்லா காட்டுக்குள்ள…
நான்தான் ராஜா…
ஆண்டவன நேரில் கண்டா…
கையோடுக் கொண்டா…

ஆண் : பூவாத் தலையா…
போட்டுப் பாத்தேன்…
தல கீழா திருப்பிக் கேட்டேன்…
விலை பேசி வாங்கப் பாத்தேன்…
பதிலே இல்லயே…

ஆண் : ஆண்டவனே ஆண்டவனே…
கொஞ்சம் பேசு…
கவலை இல்லா இதயம் உண்டா…
கண்ணில் காட்டு…

ஆண் : ஒரு நாள் இரவில…
நான் கொஞ்சம் அழுதேன்…
ஏன்டா பொறந்தோமின்னு நினைச்சேன்…
தனியா ஒரு பிடி…
நெசம்தான்னு பாத்தேன்…
தெளிவாச்சு உள் நெஞ்சு நெருப்பாச்சு…

ஆண் : கேக்காத கேள்விக்கு எல்லாம்…
பதில் தேடி பாக்கயிலேதான்…
திறக்காத கதவொன்னுதானா…
ஒரு திரை போல விலகிடலாச்சு…

ஆண் : வடக்குக்கும் தெக்குக்கும் போக…
வழிகாட்டியோ யாருன்னு சொல்லு…
ஒரு தாயத்த உருட்டிப் போட்டு…
ஒன்னா ஆறா எண்ணிப் பாரு…

ஆண் : யாருமில்ல காட்டுக்குள்ள…
நான்தான் ராஜா…
ராஜா ராஜா… ஜ ஜ ஜ…

—BGM—

ஆண் : எனது உனதென்று…
எதுவும் இங்கே கிடையாது…
விதிகள் உடையாமல்…
விடைகள் கண்ணில் தெரியாது…

ஆண் : அடிமேல் அடி வைத்து…
மெதுவா மெதுவா நடை போடு…
முடிவும் ஆரம்பம்…
மீண்டும் தொடங்கு முதல் பாட்டு…

ஆண் : மீண்டும் தொடங்கு…
முதல் பாட்டு…

குழு (ஆண்கள்) : மீண்டும் தொடங்கு…
முதல் பாட்டு…

ஆண் : வாடா…

ஆண் : புத்தி சொல்லும் திட்டம் மட்டும்…
மொத்தம் கேளு…

ஆண் : ஏன்டா…

ஆண் : வெட்டி வீசும் கத்தி…
எல்லைக் கோடு உண்டாக் கூறு…

ஆண்கள் : சரி தவற பிரிச்சு…
வரி வரியா படிச்சு…
தர்மம் நீதி…
வெல்லுமின்னு சட்டமில்ல…

ஆண்கள் : கடவுள் நின்னு கொல்லும்…
கதைகள் எல்லாம் கனவு…
தீர்ப்பு சொல்ல…
வானத்துல யாரும் இல்ல…

ஆண்கள் : ஆண்டவனே ஆண்டவனே…
கொஞ்சம் பேசு…
நீ இருந்தா இந்தப் பக்கம்…
ஓர பார்வைப் பாரு…

ஆண் : வாடா…

ஆண் : புத்தி சொல்லும் திட்டம் மட்டும்…
மொத்தம் கேளு…

ஆண் : வாடா…

ஆண் : ஏன்டா…

ஆண் : வெட்டி வீசும் கத்தி…
எல்லைக் கோடு உண்டாக் கூறு…

ஆண் : வாடா…

ஆண் : வாடா…

—BGM—


Notes : Poova Thalaiyaa Song Lyrics in Tamil. This Song from Vaanam Kottattum (2020). Song Lyrics penned by Siva Ananth. பூவா தலையா பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading