பூங்காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்இளையராஜாபிரண்ட்ஸ்

Poonkatre Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா…
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா…

ஆண் : மேகங்கள் கலையலாம் வானமே கலையுமா…
உள்ளங்கள் கலங்கலாம் உண்மையே கலங்குமா…
ஆறுதல் கூறாயோ அருகில் வந்து…

ஆண் : பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா…
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா…

—BGM—

ஆண் : அலைகளாய் ஆடுதே அன்பென்னும் உள்ளங்களே…
அனலிலே உருகுதே மெழுகு போல் சொந்தங்களே…

ஆண் : பாடிடும் குயில் தோப்பில் யார் அம்பு எய்தார்…
வீணையை விறகாக யார் இங்கு காண்பார்…
காலமே உன் லீலையே இனி மாறுமோ…

ஆண் : பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா…
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா…

—BGM—

ஆண் : பறவைகள் கூடிடும் வசந்தமாய் ஓர் காலம்…
பருவங்கள் மாறினால் பிறந்திடும் ஓர் காலம்…

ஆண் : மாலையில் பூத்தாடும் மல்லிகையின் கூட்டம்…
மாலையை சேராமல் என்ன இந்த மாற்றம்…
ஓவியம் உருவாகுமோ சுவர் இன்றியே…

ஆண் : பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா…
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா…

ஆண் : மேகங்கள் கலையலாம் வானமே கலையுமா…
உள்ளங்கள் கலங்கலாம் உண்மையே கலங்குமா…
ஆறுதல் கூறாயோ அருகில் வந்து…

ஆண் : பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா…
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா…


Notes : Poonkatre Song Lyrics in Tamil. This Song from Friends (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. பூங்காற்றே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading