பூஜைக்காக வாழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதீபன் சக்ரவர்த்திஇளையராஜாகாதல் ஓவியம்

Poojaikkaga Song Lyrics in Tamil


ஆண் : பூஜைக்காக வாழும் பூவை…
சூறையாடல் முறையோ…
உன் பூஜைக்காக வாழும் பூவை…
சூறையாடல் முறையோ…

ஆண் : இது யார் சதியோ…
இறைவன் சபையில் இதுதான் விதியோ…

ஆண் : உன் பூஜைக்காக வாழும் பூவை…
சூறையாடல் முறையோ…

—BGM—

ஆண் : இளங்காற்றைத் தாங்காத பூவின் ஜாதி…
இடி வீழ்ந்து சருகாதல் தானோ நீதி…

—BGM—

ஆண் : இளங்காற்றைத் தாங்காத பூவின் ஜாதி…
இடி வீழ்ந்து சருகாதல் தானோ நீதி…

ஆண் : கோவில் என்றால் தீபம் எங்கே…
தீபம் இல்லை நீதான் எங்கே…

ஆண் : பொங்குது மனம்…
இது ரகசிய ரணம்…
கண்களில் குளம்…
அது உனதர்ப்பணம்…

ஆண் : பொன்னெழிற் சிலை…
அது என்வசம் இல்லை…
இரு கண்களில் ராத்திரி வேதனை…

ஆண் : இருவிழி இல்லையெனும்…
ஒரு குறை இதுவரை…
இதயத்தில் எழுந்தது இல்லையே…

ஆண் : விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும்…
உண்மையில் என் விழி இல்லையே…
கனவு வரும்போது அவளின் முகதீபம்…
பிரிய முடியாது திருமுகம் நினைவினில்…

ஆண் : பூஜைக்காக வாழும் பூவை…
சூறையாடல் முறையோ…

ஆண் : இது யார் சதியோ…
இறைவன் சபையில் இதுதான் விதியோ…

ஆண் : உன் பூஜைக்காக வாழும் பூவை…
சூறையாடல் முறையோ…


Notes : Poojaikkaga Song Lyrics in Tamil. This Song from Kadhal Oviyam (1982). Song Lyrics penned by Vairamuthu. பூஜைக்காக வாழும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading