| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | பி. சுசீலா | இளையராஜா | வருஷம் 16 |
Poo Pookum Masam Song Lyrics in Tamil
பெண் : பொங்கல பொங்கல வைக்க…
மஞ்சள மஞ்சள எடு…
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி…
குழு : பொங்கல பொங்கல வைக்க…
மஞ்சள மஞ்சள எடு…
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி…
பெண் : புஞ்சையும் நஞ்சையும்…
இந்த பூமியும் சாமியும் இனி…
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி…
குழு : புஞ்சையும் நஞ்சையும்…
இந்த பூமியும் சாமியும் இனி…
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி…
பெண் : பூ பூக்கும் மாசம் தை மாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட…
சிந்துக் கவிகள் குயில்கள் பாட…
குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட…
சிந்துக் கவிகள் குயில்கள் பாட…
பெண் : புது ராகம் புதுத் தாளம்…
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்…
பெண் : பூ பூக்கும் மாசம் தை மாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…
குழு : பொங்கல பொங்கல வைக்க…
மஞ்சள மஞ்சள எடு…
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி…
குழு : புஞ்சையும் நஞ்சையும்…
இந்த பூமியும் சாமியும் இனி…
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி…
—BGM—
பெண் : வாய்க்காலையும் வயல் காட்டையும்…
படைத்தாள் எனக்கென கிராம தேவதை…
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்…
நினைத்தால் இனித்திடும் வாழும் நாள் வரை…
பெண் : குழந்தைகள் கூட…
குமரியும் ஆட…
மந்தமாருதம் வீசுது…
மலயமாருதம் பாடுது…
—BGM—
பெண் : பூ பூக்கும் மாசம் தை மாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…
—BGM—
பெண் : நான் தூங்கியே நாள் ஆனது…
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது…
பால் மேனியும் நூலானது…
அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது…
பெண் : மனதினில் கோடி…
நினைவுகள் ஓடி…
மன்னன் யார் எனத் தேடுதோ…
உன்னைப் பார்த்ததும் கூடுதோ…
—BGM—
பெண் : பூ பூக்கும் மாசம் தை மாசம்…
குழு : ம்ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட…
சிந்துக் கவிகள் குயில்கள் பாட…
குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட…
சிந்துக் கவிகள் குயில்கள் பாட…
பெண் : புது ராகம் புதுத் தாளம்…
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்…
பெண் : பூ பூக்கும் மாசம் தை மாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்…
குழு : பொங்கல பொங்கல வைக்க…
மஞ்சள மஞ்சள எடு…
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி…
குழு : புஞ்சையும் நஞ்சையும்…
இந்த பூமியும் சாமியும் இனி…
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி…
Notes : Poo Pookum Masam Song Lyrics in Tamil. This Song from Varusham 16 (1989). Song Lyrics penned by Vaali. பூ பூக்கும் மாசம் பாடல் வரிகள்.
