கங்கைக்கரை மன்னனடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாவருஷம் 16

Gangai Karai Mannanadi Song Lyrics in Tamil


ஆண் : கண்மணியே ராதை எனும்…
காதலியே நான் விரும்பும்…
பெண்மணியே ஆடை கட்டும் பைங்கிளியே…
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க…
கவலைகளை விட்டு விடு…
காற்சதங்கை சத்தமிட மேடையிலே வட்டமிடு…

—BGM—

ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…

ஆண் : நெஞ்சில் எழும் அலைகளிலே…
நீச்சல் இடும் இளைஞனடி…
வஞ்சிக் கொடி மடியினிலே…
மஞ்சம் இடும் தலைவனடி…

ஆண் : உள்ளத்தை எடுத்தேன்…
உன் கையில் கொடுத்தேன்…
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்…

ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…

—BGM—

ஆண் : தத்தும் சிறு தாமரைப் பாதங்கள்…
நடைதான் பயில…
கத்தும் கடல் நீரலை போல் இங்கு…
குழல்தான் நெளிய…

ஆண் : இல்லை என யாவரும் கூறிடும்…
இடைதான் ஒடிய…
இன்பம் என என் விழி பார்த்தது…
இமைதான் விரிய…

ஆண் : காற்சதங்கை பாடுதடி…
நாள் வரத்தான் வாடுதடி…
காற்சதங்கை பாடுதடி…
நாள் வரத்தான் வாடுதடி…

ஆண் : முன்னம் பல ஜென்மம் வழியே…
உண்டானது உன் உறவே…
இன்னும் என்னைத் தொட்டுத் தொடர்ந்தே…
பந்தாடுது உன் நினைவே…
உயிர் வாழும் பெண்ணா வா வா கண்ணா…

ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…

ஆண் : நெஞ்சில் எழும் அலைகளிலே…
நீச்சல் இடும் இளைஞனடி… …
வஞ்சிக் கொடி மடியினிலே
மஞ்சம் இடும் தலைவனடி…

ஆண் : உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்…
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்…

ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…

—BGM—

ஆண் : சந்தம் தரும் ஆடலும் பாடலும்…
சுகமாய் மலரும்…
சுட்டும் விழிப் பார்வையில்…
ஆயிரம் நிலவாய் பொழியும்…

ஆண் : அங்கம் ஒரு ஆலிலை போல்…
இங்கு நடனம் புரியும்…
அன்பே என மாதவன் தோள் தொட…
நெடுநாள் உருகும்…

ஆண் : காத்திருப்பான் கை அணைக்க…
காதலியாள் மெய் அணைக்க…
காத்திருப்பான் கை அணைக்க…
காதலியாள் மெய் அணைக்க…

ஆண் : கண்ணன் மனம் அந்தப்புரமே…
வந்தாடிடும் முத்துச் சரமே…
அச்சம் விடும் பச்சைக் கிளியே…
அவன் தாள் தினம் நத்தும் கனியே…
நாளும் ஓதும் காதல் வேதம்…

ஆண் : கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…

ஆண் : நெஞ்சில் எழும் அலைகளிலே…
நீச்சல் இடும் இளைஞனடி…
வஞ்சிக் கொடி மடியினிலே…
மஞ்சம் இடும் தலைவனடி…

ஆண் : உள்ளத்தை எடுத்தேன்…
உன் கையில் கொடுத்தேன்…
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்…

ஆண் : உள்ளத்தை எடுத்தேன்…
உன் கையில் கொடுத்தேன்…
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்…

—BGM—


Notes : Gangai Karai Mannanadi Song Lyrics in Tamil. This Song from Varusham 16 (1989). Song Lyrics penned by Vaali. கங்கைக்கரை மன்னனடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading