அடுக்கு மல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஆவாரம் பூ

Adukku Malli Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

ஆண் : அச்சாரம் அப்பா தந்த முத்தாரம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அதை அடகு வைக்காம…
காத்து வந்தேன் இந்நாளா…
தள்ளி விலகி நிக்காம…
தாளம் தட்டு கண்ணாளா…

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…

பெண் : மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

BGM

ஆண் : வெற்றி மாலை போட்டானய்யா…
கெட்டிக்கார ராசா…
முத்துப் போல கண்டான் அங்கே…
மொட்டுப் போல ரோசா…

பெண் : சொந்தம் இங்கே வந்தாளுன்னு…
சொன்னான் அவன் லேசா…
காணாதத கண்டா அப்பா…
ஆனான் அய்யா பாசா…

ஆண் : என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு…
அட எப்போதோ ரெண்டும் மட்டும் ஒண்ணாச்சு…

பெண் : அட வாய்யா மச்சானே…
யோகம் இப்போ வந்தாச்சு…

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…

பெண் : மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

BGM

பெண் : மெட்டுப் போடும் செந்தாழம்பூ…
கெட்டிமேளம் போட…
எட்டிப் பாக்கும் ஆவாரம்பூ…
வெக்கத்தோடு ஓட…

ஆண் : அக்கம் பக்கம் சொல்லாமத்தான்…
உள்ளுக்குள்ளே வாட…
சுத்தும் மனம் நில்லாமத்தான்…
கெட்டானய்யா கூட…

பெண் : சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்…
இப்போதும் கிட்டவரும் எப்போதும்…

ஆண் : அட வாய்யா ராசாவே…
அய்யா இப்ப உன் நேரம்…

பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

ஆண் : அச்சாரம் அப்பா தந்த முத்தாரம்…

பெண் : அதை அடகு வைக்காம…
காத்து வந்தேன் இந்நாளா…
தள்ளி விலகி நிக்காம…
தாளம் தட்டு கண்ணாளா…

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…


Notes : Adukku Malli Song Lyrics in Tamil. This Song from Aavarampoo (1992). Song Lyrics penned by Pulamaipithan. அடுக்கு மல்லி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading