மலையோரம் மாங்குருவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மனோ & மின்மினிஇளையராஜாஎங்க தம்பி

Malaiyoram Maankuruvi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மலையோரம் மாங்குருவி…
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி…
மகராணி உன் வரவை…
ராப்பகலா எம் மனசு தேடுதடி…
மண மேளம் காதில் கேட்குதா…
மனசோடு தேனை வார்க்குதா…

பெண் : மலையோரம் மாங்குருவி…
மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா…
மகராசன் உன் வரவை…
ராப்பகலா எம் மனசு தேடுதையா…

—BGM—

ஆண் : பூங்காத்து வீசுது அனல பூசுது…
பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா…

பெண் : தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில்…
தாலாட்டு பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா…

ஆண் : சேலை கட்டும் நந்தவனம் நீயா…
செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா…

பெண் : கண்ணுக்குள்ளே காதல் என்னும் தீயா…
சின்ன இடை தேய்வதென்ன நோயா…

ஆண் : கட்டி அணைச்சா முத்தம் பதிச்சா…
நோய் முழுக்க தீர்ந்து விடும் வாம்மா… ஹோய்…

பெண் : மலையோரம் மாங்குருவி…
மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா…
மகராசன் உன் வரவை…
ராப்பகலா எம் மனசு தேடுதையா…
மண மேளம் காதில் கேட்குதா…
மனசோடு தேனை வார்க்குதா…

ஆண் : மலையோரம் மாங்குருவி…
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி…
மகராணி உன் வரவை…
ராப்பகலா எம் மனசு தேடுதடி…

—BGM—

பெண் : கல்யாண மாப்பிள்ளே…
எனை நீ பாக்கல…
கண் மூடி நாணத்திலே நிக்கலாமா…

ஆண் : ஊரெங்கும் தோரணம்…
நடக்கும் ஊர்வலம்…
உன்னோட கன்னத்திலே வைக்கலாமா…

பெண் : அந்தியிலே சந்தனத்த பூச…
ஆசைகளை கண்களிலே பேச…

ஆண் : சேலையிலே நீ விசிறி வீச…
காலையிலே பார்த்த கண்ணு கூச…

பெண் : என்ன சுகமோ எப்ப வருமோ…
என்னென்னவோ பண்ணுதையா ஆசை… ஹோ…

ஆண் : மலையோரம் மாங்குருவி…
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி…

பெண் : மகராசன் உன் வரவை…
ராப்பகலா எம் மனசு தேடுதையா…

ஆண் : மண மேளம் காதில் கேட்குதா…
மனசோடு தேனை வார்க்குதா…

பெண் : மலையோரம் மாங்குருவி…
மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா…

ஆண் : மகராணி உன் வரவை…
ராப்பகலா எம் மனசு தேடுதடி…


Notes : Malaiyoram Maankuruvi Song Lyrics in Tamil. This Song from Enga Thambi (1993). Song Lyrics penned by Pulamaipithan. மலையோரம் மாங்குருவி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading