பேசக் கூடாது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஇளையராஜாஅடுத்த வாரிசு

Pesa Koodathu Song Lyrics in Tamil


ஆண் : பேசக் கூடாது…

—BGM—

ஆண் : பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்… ஹோய்…
ஏதும் இல்லை பேதம் இல்லை…
லீலைகள் காண்போமே…

பெண் : ஆசை கூடாது மணமாலை தந்து… ஹோய்…
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு…
லீலைகள் காண்போமே…

பெண் : ஆசைக் கூடாது…

—BGM—

ஆண் : பார்க்கும் பார்வை நீ…
என் வாழ்வும் நீ…
என் கவிதை நீ…
பாடும் ராகம் நீ…
என் நாதம் நீ…
என் உயிரும் நீ…

பெண் : காலம் யாவும் நான் உன் சொந்தம்…
காக்கும் தெய்வம் நீ…
பாலிலாடும் மேனி எங்கும்…
கொஞ்சும் செல்வம் நீ…

ஆண் : இடையோடு கனி ஆட…
தடை போட்டால் நியாயமா…
உன்னாலே பசி தூக்கம் இல்லை…
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை…
இனி மேலும் ஏன் இந்த எல்லை…

பெண் : ஆசை கூடாது மணமாலை தந்து… ஹோய்…
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு…
லீலைகள் காண்போமே…

ஆண் : பேசக் கூடாது…

—BGM—

ஆண் : காலைப் பனியும் நீ…
கண்மணியும் நீ…
என் கனவும் நீ…
மாலை மயக்கம் நீ…
பொன் மலரும் நீ…
என் நினைவும் நீ…

பெண் : ஊஞ்சல் ஆடும் பருவம் உண்டு…
உரிமை தர வேண்டும்…
நூலில் ஆடும் இடையும் உண்டு…
நாளும் வர வேண்டும்…

ஆண் : பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே…
வருகின்ற தை மாதம் சொந்தம்…
அணிகின்ற மணிமாலை பந்தம்…
இரவோடும் பகலோடும் இன்பம்…

பெண் : ஆசை கூடாது மணமாலை தந்து… ஹோய்…
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு…
லீலைகள் காண்போமே…

ஆண் : பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்… ஹோய்…
ஏதும் இல்லை பேதம் இல்லை…
லீலைகள் காண்போமே…

—BGM—


Notes : Pesa Koodathu Song Lyrics in Tamil. This Song from Adutha Varisu (1983). Song Lyrics penned by Panchu Arunachalam. பேசக் கூடாது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading