பழைய சோறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துவிஜயன்நமீதா & ரஞ்சித்ஸ்ரீகாந்த் தேவாதிருநாள்

Pazhaya Soru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பழைய சோறு பச்சை மிளகா…
பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…
திருட்டு மாங்கா தெரு சண்டை…
தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு…

ஆண் : ஆத்துக் குளியல் புடிச்ச சினிமா…
சரக்கு அடிச்ச போதை மயக்கம்…
ரயிலு பயணம் ராத்திாி காத்து…
ரம்மியமான இரகசிய நினைப்பு…

ஆண் : அட எல்லாம் ஒரு சுகம்தான்…
அடி காதல் தனி சுகம்தான்…
ஹே எல்லாம் ஒரு சுகம்தான்…
அடி காதல் தனி சுகம்தான்…

ஆண் : பழைய சோறு பச்சை மிளகா…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…

—BGM—

ஆண் : உன் தோழி கூட ஸ்கூட்டியில…
நீ போகையில உன்ன ரசிச்சேனடி…
தோத்துப் போன பயல நீதான்…
அடி தேத்தயில அத ரசிச்சேனடி…

—BGM—

ஆண் : உன் நிழலையும் பாா்த்து பயந்து நீதான்…
ஓடையில உன்ன ரசிச்சேனடி…
முத முதலா நீ தாவணி போட்டு…
ஏய் வெக்கப்பட்டு நீ நடக்கையில…
என் மனச நான் உன்கிட்ட இழந்தேனடி…

ஆண் : அட எல்லாம் ஒரு சுகம்தான்…
அடி காதல் தனி சுகம்தான்…
ஹே எல்லாம் ஒரு சுகம்தான்…
அடி காதல் சுகம்தான்…

ஆண் : பழைய சோறு பச்சை மிளகா…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…

—BGM—

ஆண் : ஏய் அரசலாத்து தண்ணியில…
மீன் புடிக்கையில உன்ன ரசிச்சேனடி…
தேங்காய் சிரட்டையில் பிள்ளையாா் செஞ்சு…
நீ கும்பிடையில் அத ரசிச்சேனடி…

—BGM—

ஆண் : ஹே ஊசி மழைய ஒவ்வொன்னாக…
நீ எண்ணயில அத ரசிச்சேனடி…
முத முறையா நீ என்கிட்டதான்…
வந்து பேசயில நான் கூசயில…
என் உசுரயே உன்கிட்ட குடுத்தேனடி…

பெண் : அட எல்லாம் ஒரு சுகம்தான்…
அட காதல் தனி சுகம்தான்…
ஹே எல்லாம் ஒரு சுகம்தான்…
அட காதல் சுகம்தான்…

ஆண் : பழைய சோறு பச்சை மிளகா…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…
பெண் : ஹ்ம்ம்…


Notes : Pazhaya Soru Song Lyrics in Tamil. This Song from Thirunaal (2016). Song Lyrics penned by Muthu Vijayan. பழைய சோறு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading