காிசக்காட்டு கவிதையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துவிஜயன்அபய் ஜோத்புர்கர்ஸ்ரீகாந்த் தேவாதிருநாள்

Karisa Kaattu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…

ஆண் : உன் பிாிவுல வாடுறேன்டி…
உன் அன்புக்கு ஏங்குறன்டி…

ஆண் : என் மனச வருக வச்ச…
நினைப்பிலதான் உருக வச்ச…
தனியா தவிக்கிறேன்டி…
நான் தவியா தவிக்கிறேன்டி…

ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…

—BGM—

ஆண் : காசு கடைத் தெருவுலதான் கலகலன்னு வருவேயடி…
கண்ணாடி வேணுமுன்னு அடம்புடிச்சு நிப்பியேடி…

—BGM—

ஆண் : பஞ்சுமுட்டாய் பாத்ததுமே…
கொஞ்சிக் கொஞ்சி கெஞ்சுவியே…
பாசத்துல என்ன நீயும்…
மனுசனாக மாத்துனியே…

ஆண் : புறந்ததேதி பேரும் வச்சு…
அழகு பாத்த என்ன… ஓ…
ஈரமில்லா கண்ணு ரெண்டும்…
ஈரம் கண்டதென்ன…

ஆண் : என் குலசாமி நீதான்டி…
என் கண்ணகட்டி போனியடி…

ஆண் : காிசக்காட்டு கவிதையே…

—BGM—

ஆண் : சாமிமலை சந்தையில…
சட்டை வாங்கித் தந்தியடி…
கோவில் குளப் படியெல்லாம்…
பேரெழுதி வச்சியடி…

—BGM—

ஆண் : விரல் புடிச்சு மோதிரம் போட்டு…
நம்பிக்கைய விதைச்சியடி…
சோழி போட்டு ராசிபாத்து…
திருந்துவேன்னு சொன்னியடி…

ஆண் : அனாதையா இருந்த என்ன…
அரவணைச்சுப் பாத்தியடி…
அக்கறையாப் பாத்துப்புட்டு…
அம்போன்னு விட்டியடி…

ஆண் : அடி ரெட்டையா வாழ்ந்த என் உசுர…
ஒத்தையா விட்டுப் போனியடி…

ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…

—BGM—


Notes : Karisa Kaattu Song Lyrics in Tamil. This Song from Thirunaal (2016). Song Lyrics penned by Muthu Vijayan. காிசக்காட்டு கவிதையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading